இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது என்பது இக்காலத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகி விட்டது. இதனால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது மரபணு காரணங்களால் இருக்கலாம் என்றாலும், சீரற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த 5 வகையான பழங்களையும் அவசியம் சாப்பிடுங்க
நரைத்த முடியை மீண்டும் கருப்பாக்க ஹேர் டை பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால், இப்படி செய்தால் சிலருக்கு ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். இதற்கு மாற்று வழிகள் இருக்கிறதா என்று பலரும் சிந்திப்பது உண்டு. அந்த வகையில், தேங்காய் எண்ணெய் மற்றும் சில பொருட்கள் கொண்டு இளநரையை எப்படி மீண்டும் கருமையாக்குவது என்று பார்ப்போம்.
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நன்மை அளிக்கும். அதேபோல், மருதாணி இயற்கையான ஹேர் கலராக செயல்படுகிறது. முதலில், மருதாணி இலைகளை வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், 4 முதல் 5 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை சூடாக்குங்கள்.
அதில் உலர்ந்த மருதாணி இலைகளை சேர்த்து நன்கு சூடுபடுத்தவும். இப்போது எண்ணெய் நிறம் மாற தொடங்கியதும் அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் வெதுவெதுப்பானதும் முடியில் தடவி, 30 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த தண்ணீரில் குளிக்கவும். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் முடி கருமை நிறம் பெறும்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் மட்டும் போதாது; இந்த 5 பராமரிப்பு முறைகளும் அவசியம்
நரை முடியை நீக்க தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காயில் பல வகையான ஊட்டச்சத்துகளும், ஆயுர்வேத குணங்களும் உள்ளன. இது நம் சருமத்திற்கும், முடிக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லிக்காயில் உள்ள கொலஜனை அதிகரிக்கும் ஆற்றல், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதன்படி, 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் 2 முதல் 3 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு பாத்திரத்தில் சூடுபடுத்த வேண்டும்.
இந்த கலவை குளிர்ந்ததும், உச்சந்தலையில் தடவலாம். இதை இரவு முழுவதும் தலையில் வைத்திருந்து, காலை எழுந்ததும் குளித்து விடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது நல்ல பலன் அளிக்கும். அதன்படி, இது போன்ற எளிமையான மற்றும் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி இளநரை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com