
நீங்கள் நீண்ட, அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால் அதற்கு வெளிப்புற பராமரிப்பு மட்டும் போதாது. சத்தான உணவுகள் மூலமாக மட்டுமே நீண்ட காலத்திற்கு அடர்த்தியான கூந்தலை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதற்கு உதவியாக இருக்கும் 5 பானங்கள் குறித்து இதில் காணலாம்.
மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்
பீட்ரூட்டில் பீட்டாலைன்ஸ் (Betalains) எனப்படும் சிறப்பு ஊட்டச்சத்துகள் உள்ளன. இதைக் குடிக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதன் மூலம், உச்சந்தலை மற்றும் முடியின் வேர்க்கால்களுக்கு அதிக ஆக்ஸிஜன் செல்கிறது. இது கூந்தல் வேர்களை ஆரோக்கியமாக மாற்றி, சீரான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. கூடுதலாக, இதில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, சின்க் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை, ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

நெல்லிக்காய் சாறு பெரும்பாலும் கூந்தலுக்கான டானிக் என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின் சி, அன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பிய இது, முடியின் வேர்க்கால்களை பலப்படுத்துகிறது, இதன் விளைவாக முடி உதிர்வது குறைந்து அதன் வளர்ச்சி தூண்டப்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள இயற்கையான ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள், உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதன் மூலம், முடி வளர தேவையான ஊட்டச்சத்துகள் சிறப்பாக சென்றடைகின்றன.
மேலும் படிக்க: கூந்தல் அடர்த்தியாக வளர உதவும் ஊட்டச்சத்துகள்; இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க மக்களே
கற்றாழை சாறு குடிப்பதால், உள்ளிருந்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்த முடியும். இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் ஈ முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகின்றன. மேலும், உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதன் இயற்கையான என்சைம்கள், அழற்சியை குறைக்க உதவுகின்றன. அத்துடன் குடலை சுத்தம் செய்வதன் மூலம் ஊட்டச்சத்துகளை சிறப்பாக உறிந்து கொள்ள உதவுகின்றன. இது வலுவான, பளபளப்பான முடிக்கு மிகவும் அவசியம்.

இளநீரை தவறாமல் குடிப்பது, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு இயற்கையான வழியாகும். இதற்கு காரணம், இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சீரான கலவை தான். பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த இளநீர், உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியின் வேர்க்கால்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது. இதன் நீரேற்ற பண்புகள், உடலையும், உச்சந்தலையையும் உள்ளிருந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் வறட்சி மற்றும் முடி உதிர்தல் குறைகிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துகள் பீட்டா-கரோட்டின் உடன் நிரம்பியுள்ளன. இது ஒரு ஆற்றல் மிகுந்த அன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது சீபம் (Sebum) உற்பத்தியை சீராக பராமரித்து, உச்சந்தலை திசுக்களுக்கு ஈரப்பதம் அளிக்கிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ, வலிமையான கூந்தலை பராமரிக்கவும் உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com