
உடல் எடையை குறைப்பது என்பது இன்று மிகவும் கடினமான பணிகளில் ஒன்றாகும். எடையை குறைக்க மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் செலவு செய்வார்கள். அதே போல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுத் திட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் எடை குறையது. உடல் எடையை அதிகரிப்பதால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். எடையைக் குறைக்க உதவும் மிகவும் சுவையான கோடைக்கால ஜூஸ் செய்முறையை உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளோம். இது குறித்த தகவலை உணவியல் நிபுணர் சிம்ரன் பாசிம் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: கோடையில் ஏற்படும் பிறப்புறுப்பு தொற்றைச் சரிசெய்ய எளிய குறிப்புகள்

காலை உணவில் மாம்பழம்-புதினா ஜூஸ் குடித்தால் உடல் எடையைக் குறைக்க உதவும். மாம்பழத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் அதை காலையில் உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் இதுமட்டுமின்றி உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய சக்தியாக செயல்படுகிறது. இதில் சேர்க்கப்படும் புதினா செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இது உடலில் இருக்கும் நச்சுகள் மற்றும் அசுத்தங்களைக் குறைக்க உதவுகிறது. இந்த வழியில் எடை குறைக்க முறச்சித்தால் நல்ல பலனை அடையலாம். இந்த ஜூசை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: இந்த உணவு திட்டத்தை பாலோ பண்ண ஒரே மாதத்தில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com