herzindagi
fat loss big image

1Month Weight Loss: இந்த உணவு திட்டத்தை பாலோ பண்ண ஒரே மாதத்தில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்

எடை குறைப்பு முறையில் பலவீனமாக உணராத வகையிலும், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வகையிலும் உணவு முறை இருக்க வேண்டும்
Editorial
Updated:- 2024-05-08, 13:34 IST

பல முயற்சிகளுக்குப் பிறகும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்றால் இதற்கு முக்கிய காரணம் பலவீனமான வளர்சிதை மாற்றமே. வளர்சிதை மாற்றம் குறையும் போது உடல் பருமன் வேகமாக அதிகரிப்பதால் உடல் எடையை குறைப்பது கடினம் ஆகிறது. உடல் எடையை குறைக்க மக்கள் உண்ணாமல் நீண்ட நேரம் பசியுடன் இருப்பார்கள். ஆனால் உடல் எடையை குறைக்க பசியுடன் இருப்பது சரியான வழிமுறை அல்ல. எடையை குறைக்கும் முயற்சியில் சரியான நேரங்களில் சாப்பிட வேண்டும் மற்றும் சரியான ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க சரியான உணவு முறை மிகவும் முக்கியமானது. அதவது எடை குறையும் வகையிலும், பலவீனமாக உணராத வகையிலும், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வகையிலும் உணவு முறை இருக்க வேண்டும். அத்தகைய ஒரு உணவுத் திட்டத்தைப் பற்றி பார்க்கலாம். இது குறித்து டயட்டீஷியன் ராதிகா கோயல் தகவல் அளித்து வருகிறார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்.

மேலும் படிக்க: கோடைக்கால வெப்பம் தாங்காமல் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறதா... இப்படி பண்ணுங்க போதும்

உடல் எடையை குறைக்க 1 மாதம் இந்த டயட் திட்டத்தை பின்பற்றவும் 

  • காலையில் முதலில் ஊறவைத்த 5 பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுங்கள். இதனுடன் கொதிக்க வைத்த கொத்தமல்லி தண்ணீரையும் அருந்தவும்.
  • பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உடலுக்கு வலிமை மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இது தவிர கொத்தமல்லி நீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலை நச்சுத்தன்மையை நீக்குகிறது. 
  • காலை உணவாக 2 இட்லி அல்லது சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள். இது தவிர நீங்கள் சியா புட்டிங் / சாண்ட்விச் அல்லது 2 முட்டை ஆம்லெட் சாப்பிடலாம்.

breakfast inside  ()

  • இவையனைத்தும் புரதச்சத்து நிறைந்து காலை உணவாக சாப்பிடுவதால் வயிறு நிறைந்திருக்கும்.
  • உங்கள் செரிமானம் நன்றாக இருந்தால் காலை உணவிலும் முளைக்கட்டிய பயிற்களை சாப்பிடலாம். ஆனால் உங்கள் செரிமானம் பலவீனமாக இருந்தால் அதை சாப்பிட வேண்டாம்.
  • எந்த பருவகால பழங்களையும் இடைப்பட்ட வேலையில்  சாப்பிடுங்கள். இதனுடன் நீங்கள் பூசணி மற்றும் சூரியகாந்தி விதைகளை சாப்பிடலாம்.
  • நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பழங்களில் காணப்படுகின்றன. இது மலச்சிக்கலைப் போக்குவதுடன், உடலுக்கு வலிமையையும் அளிக்கிறது.

healthy eat inside

  • மதிய உணவை சாலட்டுடன் தொடங்குங்கள். ஒரு சிறிய தட்டு சாலட் சாப்பிடுங்கள், அவற்றை அதிகமாகச் சாப்பிடுவதை தவிற்க்க வேண்டும்.
  • மதிய உணவில் தயிருடன் வெஜ் புலாவ் சாப்பிடலாம். இது தவிர பருப்பு, காய்கறி அல்லது 1 ரொட்டி சாப்பிடலாம். இதுவே போதுமானதாக இருக்கும்.
  • மதிய உணவை மிகவும் ஆரோக்கியமானதாக மாற்ற கோதுமைக்கு பதிலாக உளுந்து மாவு, ராகி அல்லது பல வகை தானியங்ளை சேர்த்து அரைத்த ரொட்டி சாப்பிடுங்கள். இந்த மாவுகள் அனைத்தும் உடல் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
  • மாலையில் சாதாரண தேநீர் அருந்தலாம். இதனுடன் வறுத்த பருப்பு அல்லது மக்கானா சாப்பிடலாம்.

மேலும் படிக்க: தைராய்டு இருப்பதால் உடல் எடை கூடுகிறதா... இப்படி பண்ண ஃபிட்டா ஸ்லிம்மா இருக்கலாம்!!

  • மாலை நேர சிற்றுண்டிக்கு மக்கானா மற்றும் சாலட் ஆகியவற்றைக் கலந்து ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளலாம்.
  • இரவு உணவில் வெஜ் கிச்சடியுடன் பச்சை சட்னி சாப்பிடவும். இது தவிர கஞ்சியும் சாப்பிடலாம்.
  • தூங்கும் முன் பெருஞ்சீரகம் அல்லது இலவங்கப்பட்டை தேநீர் அருந்தவும். இந்த உணவுத் திட்டம் உடல் எடையை குறைக்க உதவும். 

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com