
Weight loss tips: ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த இந்த ஆற்றல் மிகுந்த விதைகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைத்து, பசியை கட்டுப்படுத்தி, உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) இயற்கையாகவே அதிகரிக்கும். மேலும், இவை உடல் எடை குறிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பாதாம் பருப்பு:
பாதாமில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம், உங்களை நீண்ட நேரம் பசியின்றி இருக்க செய்கிறது. இதனால் தேவையில்லாத சிற்றுண்டிகள் சாப்பிடுவது குறைகிறது. ஒரு சிறிய கைப்பிடி அளவு பாதாமை காலை நேரத்தில் சாப்பிடலாம். எனினும், உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட வகைகளை தவிர்த்து, பாதாம் சாப்பிடுவது நன்மை அளிக்கும்.

மேலும் படிக்க: Benefits of sundaikkai: நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்; செரிமான மண்டலத்தை சீராக்கும் - சுண்டைக்காயில் மறைந்திருக்கும் நன்மைகள்!
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்த வால்நட், உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, வீக்கத்தை குறைக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 7 வால்நட் போதுமானது. இதை சாலட் அல்லது ஓட்ஸ்மீல் மீது தூவி சாப்பிடலாம்.
இந்த சிறிய விதைகள் தண்ணீரில் அல்லது பாலில் ஊற வைக்கும் போது விரிவடைகின்றன. இவற்றை எடுத்துக் கொள்ளும் போது திருப்தி உணர்வு அதிகரித்து, பசி குறைகிறது. மேலும், இவை இரத்த சர்க்கரை மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. 1 தேக்கரண்டி சியா விதைகளை இரவில் தண்ணீர் அல்லது பாதாம் பாலில் ஊறவைத்து சியா புட்டிங்காக சாப்பிடலாம்.
மேலும் படிக்க: நாவல் பழத்தின் நன்மைகள்: நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கிய குறிப்புகள்
1 தேக்கரண்டி ஆளி விதைகளானது, கொழுப்பை குறைப்பதற்கும், செரிமானத்திற்கும் உதவுகிறது. நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் உள்ளன. ஆளி விதைகளை பொடியாக்கி ஸ்மூத்தீஸ், தயிர் அல்லது ஓட்ஸ்மீலுடன் கலந்து சாப்பிடலாம்.
புரதம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இந்த விதைகள், மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வயிறு நிரம்பிய உணர்வை தருகின்றன. இவை இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்துகின்றன. வறுத்த பூசணி விதைகளை சுமார் 1 அவுன்ஸ் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த சூரியகாந்தி விதைகள், உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியைக் குறைக்கிறது. சாலட்களுடன் ஒரு தேக்கரண்டி அளவில் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க இந்த சிறிய மாற்றங்கள் பெரிய பலன்களை தரும். ஆனால், எந்தவொரு புதிய உணவையும் உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்ப்பதற்கு முன், ஊட்டச்சத்து நிபுணரையோ அல்லது மருத்துவரையோ கலந்து ஆலோசிப்பது சிறந்தது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com