Anemia In Child: குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் ரத்தசோகை!

இரத்த சோகை பாதிப்பைத் தடுக்க மாத்திரைகளை உட்கொண்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடிய உணவுப்பொருள்களையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

list of anemia symptoms
list of anemia symptoms

குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிகவும் சவாலான விஷயம். பிறந்தது முதல் 5 வயது ஆகும் வரை குழந்தைகளுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக குழந்தைகள் வளரும் போது அடிக்கடி காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதை சாதாரணமாக விட்டு விடக்கூடாது. ஆனால் நாம் சாதாரண காய்ச்சல் தான் என்று நாம் கண்டுகொள்ளமாட்டோம். நாளடைவில் இதுவே குழந்தைகளுக்கு வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் ரத்தசோகையால் அதாவது அனீமியாவால் பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதோ இன்றைக்கு குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் இரத்த சோகை பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? அதற்கானக் காரணங்கள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.

anemia treatment

குழந்தைகளைப் பாதிக்கும் அனீமியா:

பொதுவாக மனிதனின் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, இருக்க வேண்டிய அளவை விட குறைவாக இருக்கும் போது ஏற்படும் பாதிப்பைத் தான் அனீமியா எனப்படும் இரத்த சோகை பாதிப்பு என்கிறோம். குழந்தைகளைப் பொறுத்தவரை இதன் பாதிப்பு குறைய ஆரம்பிக்கும் போதே அதன் அறிகுறிகளை நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

அறிகுறிகள்:

குழந்தைகள் தீடிரென குண்டாகுதல், முடிக்கொட்டுதல், முகம் வெளுமையாக தெரிதல், குமட்டல், அதிகப்படியான சோர்வு, உடல் வலி, கை கால் குடைச்சல் போன்ற பாதிப்பையெல்லாம் சந்திக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி தோல் சிவப்பு நிறமாகுதல் போன்ற பாதிப்புகளும் அனீமியாவின் அறிகுறிகளாகும். இரத்த சோகை பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வமின்மை ஏற்படும். மேலும் எந்த வேலையிலும் கவனம் இருக்காது. மந்தமான மனநிலையில் இருப்பார்கள். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி உடல் நல பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

pediatric anemia

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போது அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஹீமோகுளோபின் அளவை சரிப்பார்க்க வேண்டும். பொதுவாக குழந்தைகளுக்கு 8 g/dl க்கும் குறைவாக இருக்கும் போது இந்த பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவே மருத்துவரின் அறிவுரையின் பேரில் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

மேலும் படிக்க:சுட்டெரிக்கும் கோடை வெயில்;உடல் சூட்டைத்தணிக்க உதவும் குளிர்பானங்கள்!

பாதிப்பைத் தடுக்க செய்ய வேண்டியது?

anemia

மருத்துவரின் ஆலோசனையின் படி, இரத்த சோகை பாதிப்பைத் தடுக்க மருந்து, மாத்திரைகளை உட்கொண்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடிய உணவுப்பொருள்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இரும்புச்சத்து உள்ள கீரை வகைகள், முளைக்கட்டிய பயிறு வகைகளைக் குழந்தைகளுக்குக கட்டாயம் கொடுக்க வேண்டும். மேலும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் மாதுளை, திராட்டை, அத்திப்பழம் போன்ற பழங்களைத் தினமும் குழந்தைகளின் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Image Source- Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP