நம்முடைய சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு மசாலா பொருட்களுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவப் பலன்கள் உள்ளது. இவற்றில் ஒன்றான பூண்டு குறித்து குறித்துத் தான் இன்றைக்கு நாம் பார்க்க விருக்கிறோம். சளி, இருமல், காய்ச்சல் வந்தால் மிளகு, சீரகம், பூண்டு சேர்ந்து செய்யப்படும் ரசம் தான் அனைவராலும் சாப்பிட முடியும். அந்தளவிற்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பூண்டு பற்களை வைத்து ரசம் மட்டுமில்லை,பூண்டு பாலும் தயார் செய்யலாம். இதைத் தினமும் பருகிவரும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நாம் பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதோ பூண்டு பால் எப்படி தயார் செய்யலாம்? அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
பூண்டு பால் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்:
மேலும் படிங்க: பெண்களே.. கருமுட்டை வெளிவருவதை அறிந்துக் கொள்ள வேண்டுமா? அறிகுறிகள் இவை தான்!
- குளிர்காலத்தில் ஏற்படும் பருவ தொற்றிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் காலை அல்லது இரவில் கட்டாயம் பூண்டு பால் பருக வேண்டும். இதில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் சளி, இருமல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் ஆன்டி- ஆக்ஸிஜனேற்ற பண்புகளை பூண்டு கொண்டுள்ளதால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
- உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் பூண்டு பால் பருகலாம். கொலஸ்ட்ராலின் உற்பத்தியை அதிகரிப்பதைத் தடுக்கிறது. உடலில் தேவையில்லாமல் படிந்துள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
- 30 வயதை அடைந்தாலே பெண்களுக்கு மூட்டு வலி பிரச்சனையும் உடன் சேர்ந்துவிடுகிறது. அதிலும் உடல் பருமனான பெண்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. உட்கார்ந்து எழுந்திருக்கக்கூட முடியாத அளவிற்கு வலி ஏற்படும். இதிலிருந்து தப்பிப்பதற்கு நீங்கள் பூண்டு பாலை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் பூண்டு பால் கட்டுக்குள் வைக்கிறது. மெட்டபாலிசம் அதாவது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறது.
- பூண்டு பாலில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் வாயு, வயிற்றுப் பொருமல் , அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
- பூண்டு பாலைத் தினமும் குடித்து வரும் போது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும் மலட்டுத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் பளபளப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் பூண்டு பால் பருகலாம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும பிரச்சனைகளை நீக்கி பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு உதவியாக உள்ளது.
- பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.
இது போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பூண்டு பால் கொண்டிருந்தாலும் நெஞ்செரிச்சல், இரப்பை மற்றும் வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிங்க:சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பான் கேக்…ரெசிபி டிப்ஸ் இங்கே!
பூண்டு பால் தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். பின்னர் பூண்டு பற்களை இடித்து பாலில் சேர்த்து கொதிக்க விடவும். பாதியாக வற்றும் வரை கொதிக்க விட்ட பின்னர் வடிகட்டி குடித்தால் போதும், சுவையான பூண்டு பால் ரெடி.
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். பின்னர் பூண்டு பற்களை இடித்து பாலில் சேர்த்து கொதிக்க விடவும். பாதியாக வற்றும் வரை கொதிக்க விட்ட பின்னர் வடிகட்டி குடித்தால் போதும், சுவையான பூண்டு பால் ரெடி.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation