herzindagi
parenting tips

Ovulation Symptoms: பெண்களே.. கருமுட்டை வெளிவருவதை அறிந்துக் கொள்ள வேண்டுமா? அறிகுறிகள் இவை தான்!

<span style="text-align: justify;">ஓவலேஷன் கிட் சிறுநீரை உபயோகப்படுத்தி கருமுட்டை வரக்கூடிய நேரத்தைக் கண்டறிய முடியும்.&nbsp;</span>
Updated:- 2024-02-01, 14:20 IST

இன்றைக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலானாலும் குழந்தையில்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். இவர்களுக்காக புற்றீசல்கள் போல ஆங்காங்கே கருத்தரிதல் மையம் புதிது புதிதாக உருவாகிறது. இயற்கையாக கருத்தரிக்க வேண்டும் என்று நினைத்தாலும் காலதாமதம் பெண்கள் பலரை செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் மருத்துவமனைகளுக்குத் தான் அழைத்து செல்கிறது. இதனால் சிலர் கர்ப்பம் அடைந்தாலும் பல முயற்சிகளில் பலர் தோல்வியை சந்திக்கின்றனர். இதனால் கருமுட்டை வெளியேறும் நாள்களை சரியாக அறிந்துக்கொள்ளவும்,  அந்த நாள்களில் உடலுறவு கொள்ளும் போது நிச்சயம் கர்ப்பம் தரிக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக அண்டவிடுப்பு அதாவது கருமுட்டை வெளியே வருவது என்பது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு 11 முதல் 21 நாட்கள் இடையில் நடைபெறுகிறது. இந்த கருமுட்டை தான் விந்தணுக்களோடு ஒன்றிணைந்து ஃபலோபின் குழாய் வழியாக சென்று கருவை உறுதி செய்கிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் என்பது மாறுபடக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு 28 நாட்கள் தான் மாதவிடாய் சுழற்சி என்றால் 14 வது நாளில் கருமுட்டை வெளியேறும். இதுவே 31 மாதவிடாய் சுழற்சி காலம் 31 நாட்கள் இருந்தால், மாதவிடாய் முடிந்த 17 வது நாளில் கருமுட்டை வெளியேறக்கூடும். இவ்வாறு வெளியேறக்கூடிய கருமுட்டைகள் கருவுறாவிட்டால் 24 மணி நேரத்தில் இறந்துவிடுவதோடு அதீத இரத்தப் போக்காக வெளியேறக்கூடும். இது போன்று ஒவ்வொரு மாதமும் நிகழும் இந்த அண்டவிடுப்பை பெண்கள் சில  அறிகுறிகள் மூலம் எளிதில் அறிந்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதோ என்னென்ன அறிகுறிகள்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

மேலும் படிங்க:கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டியது?

Ovulation Symptoms

கருமுட்டை வெளியேறுவதற்கான அறிகுறிகள்:

  • கருமுட்டை வெளியேறும் சமயத்தில், கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் இருந்து தண்ணீர் போன்ற வௌ்ளை நிற திரவம் வெளியேறுவதோடு, பிறப்புறுப்பு சுரப்புகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.
  • மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் சிலருக்கு மார்பக பகுதியில் வலி ஏற்படக்கூடும். இதே போன்று தான் கருமுட்டை வெளியேற்றத்தின் போதும்.. குறிப்பிட்ட தேதிகளில் மார்பகங்கள் கனமாகவும், தொட முடியாத அளவிற்கு வலி ஏற்படக்கூடும்.
  • கருமுட்டை வெளியேறும் போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால் குமட்டல் மற்றும் தலைவலி ஏற்படக்கூடும். இதற்கான மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
  • உடலின் அதிகப்படியான வெப்பநிலை ஏற்படக்கூடும். மேலும் கருமுட்டை வெளியேறும் சமயத்தில் பெண்களுக்கு பாலியல் ஆசை அதிகரித்து காணப்படும் எனவும் ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் படிங்க: ஏரோபிக் உடற்பயிற்சி மேற்கொண்டால் இத்தனை நன்மைகளா?

Ovulation Symptoms for women  

தற்போது கர்ப்பம் தரிப்பதை பெண்கள் எப்படி வீட்டிலேயே சில டெஸ்ட்களின் மூலம் அறிந்துக் கொள்கிறார்களோ? அது போன்று ஓவலேஷன் கிட் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். சிறுநீரை உபயோகப்படுத்தி கருமுட்டை வரக்கூடிய நேரத்தைக் கண்டறிய முடியும். அதாவது கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியேற்ற தூண்டும் லுடினைசிங் ஹார்மோன் அளவு அதிகமாக இருந்தால் டெஸ்ட் கிட் பாசிட்டீவ் என காண்பிக்கும். இதை வைத்து நீங்கள் எளிதில் அறிந்துக் கொள்ள முடியும்.

 Image Credit: Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com