PCOS அல்லதுPCOD காரணமாக சீரற்ற மாதவிடாய் ஏற்படலாம். இந்த இரண்டு பிரச்சனைகளும் பெண்களின் ஹார்மோன் சமநிலையற்ற தன்மையால் ஏற்படுகின்றன. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
வாழ்க்கை முறை பயிற்சியாளர் டாக்டர் சினேகல் அல்சுலே விரிவாக இதை பற்றி நம்மிடம் விளக்கியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அவற்றின் முக்கிய வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் PCOD என்பது பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ் என்றும், இது ஹார்மோன் கோளாறு என்றும் அது கருப்பையை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கருப்பையில் பல நீர்க்கட்டிகள் உருவாகி இருக்கும்.
இதுவும் உதவலாம் :தொப்புளில் எண்ணெய் விடுவதால் கிடைக்கும் நன்மைகள்
அதேசமயம், PCOS என்பது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பதைக் குறிக்கிறது, இது பல்வேறு கோளாறுகளைக் குறிக்கிறது.PCOS உடைய பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் இருக்கலாம், ஆனால் இவர்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் முதன்மையான பிரச்சனையாக இருக்கின்றன, இதன் காரணமாக பல்வேறு அறிகுறிகள் உடலில் தோன்றும். இந்த நிமிடம் வரை, நீங்கள் இந்த இரண்டையும் ஒரே விதமான பிரச்சனையாக கருதினால், அவற்றுக்கிடையேயான முக்கிய வேறுபாடுகள் என்ன என்பதை டாக்டர். சினேகலிடமிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேற்கூறிய படி இந்த பிரச்சினை ஏற்படும் போது, கருப்பையில் பல முதிர்ச்சியடையாத முட்டைகள் உருவாகும். இந்த முட்டைகள் இறுதியில் நீர்க்கட்டிகளாக மாறி விடுகிறது. துரித உணவு உட்கொள்வது, அதிக எடை, மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் ஆகிய பிரச்னைகள் தான் இந்த நிலைக்கு வழிவகுக்கும். பிசிஓடியின் பொதுவான அறிகுறிகள் என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகரிப்பு, கருவுறாமை மற்றும் முடி உதிர்தல். இந்த கோளாறு ஏற்பட்டால், கருப்பை பொதுவாக பெரிதாகி, அதிக அளவு ஆண்ட்ரோஜன்களை சுரக்கின்றன, இது பெண்ணின் உடல் மற்றும் அவளுடைய கருவுறும் தன்மையையும் பாதிக்கிறது.
PCOSஐ ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு என்று கூறலாம், இது PCOD விட மிகவும் மோசமான பிரச்சனையாகும். இந்த நிலையில், கருப்பைகள் அதிக அளவு ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன, மேலும் இது ஒவ்வொரு மாதமும் கருப்பையில் பத்துக்கும் மேற்பட்ட ஃபோலிகுலர் நீர்க்கட்டிகள் உருவாக வைக்கிறது. இது அந்த முட்டைகளை வெளியே வருவதை தடுக்கிறது, இதனால் அனோவுலேஷன் ஏற்படுகிறது. முடி உதிர்தல், உடல் பருமன் மற்றும் கருவுறாமை ஆகியவை இதன் அறிகுறிகளாகும்
PCOS மற்றும் PCOD இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று ஹார்மோன் அளவுகள் ஆகும். PCOS அதிக அளவு ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களை கொண்டது, அதேசமயம் PCODயில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இல்லை.
இரண்டு பிரச்சனைகளிலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகிறது, PCOS ஆனது முகப்பரு, முடி உதிர்தல் (ஹிர்சுட்டிசம்) மற்றும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி போன்ற கூடுதல் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறது.
PCOSக்கு, மருத்துவர்கள் குறைந்தது இரண்டு அறிகுறிகளையாவது கண்டுபிடிக்க பார்க்கிறார்கள் - ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ஆண்ட்ரோஜன் அளவுகள் மற்றும் கருப்பையில் நீர்க்கட்டிகள். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும், உங்களுக்கு PCOS உள்ளது என்று நிரூபணம் ஆகிறது. PCODயைப் பொறுத்தவரை, கருப்பையில் நிறைய நீர்க்கட்டிகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை அறிகுறிகள் ஆகியவை கண்காணிக்க படுகின்றன.
இதுவும் உதவலாம் :நோய்கள் அண்டாமல் இருக்க தூங்குவதற்கு முன் இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்
அறிகுறிகளின் தீவிரம் மற்றும் தனிப்பட்ட நபரின் தேவைகளைப் பொறுத்து சிகிச்சை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இருப்பினும், PCOSக்கு ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது, PCODக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருப்பை நீர்க்கட்டிகள் போன்ற அறிகுறிகளை கண்டறிவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், இந்த இரண்டு பிரச்சினைகளுக்குமே அதிகமான வாழ்க்கைமுறை மாற்றங்கள் தேவைப்படுகின்றன, இவை இரண்டிற்கும் அடிப்படைக் காரணமே மாறி வரும் நம் வாழ்க்கை முறை தான்.
இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுகிறது. மனத்துணிவை இழக்காதீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றுங்கள். மேலும், மருத்துவரை அணுகிய பிறகு உங்கள் சிகிச்சையைத் தொடங்கலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com