Exercises to Prevent Diseases : நோய்கள் அண்டாமல் இருக்க தூங்குவதற்கு முன் இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்

இரவு தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்வது உங்கள் மன அழுத்தத்தை போக்கி நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. இதற்கு உதவக்கூடிய சில உடற்பயிற்சிகளை இப்பதிவில் பார்க்கலாம்…

night workout

உடற்பயிற்சி பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கிறது. உடல் எடையை குறைப்பது முதல் மன அழுத்தத்தை விட்டு விலகி இருப்பது வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். இதனுடன் உள் உறுப்புகளும் சீராக செயல்படும் மற்றும் நல்ல தூக்கத்தையும் பெறலாம். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை பலராலும் ஒதுக்க முடிவதில்லை. இந்நிலையில் தூங்குவதற்கு முன்பு சுலபமாக செய்யக்கூடிய இந்த உடற்பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம். இதன் மூலம் நல்ல தூக்கம் வரும் மற்றும் நோய்வாய்ப்படுவதையும் தவிர்க்கலாம்.

தூங்குவதற்கு முன் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

நீட்சி பயிற்சி

தூங்குவதற்கு முன் நீட்சி பயிற்சி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது நாள் முழுவதும் சோர்வுற்ற, இறுக்கமான தசைகளை தளர்த்துவதற்கான ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இதை தரையில் அல்லது படுக்கையில் கூட எளிதாக செய்ய முடியும். நீட்சி பயிற்சி உங்களுக்கு நல்ல ஓய்வு மற்றும் தூக்கத்தை தரும். இதன் மூலம் மன நிம்மதியும் கிடைக்கும்.

womens workouts

குழந்தை போஸ்

இதற்கு பாலாசனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஆசனம் அல்லது தோரணை முதுகு மற்றும் கழுத்து வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் வீட்டு வேலைகளை முடித்து படுக்கைக்கு செல்லும் போது உடல் வலியால் அவதிப்படுகிறீர்களா? உடல் வலியில் இருந்து விடுபடவும், நல்ல தூக்கத்திற்கும் இந்த பயிற்சியை தினமும் செய்யலாம்.

முதுகெலும்புக்கான பயிற்சி

படுக்கையில் உட்கார்ந்திருக்கும் பொழுதிலும் இந்த பயிற்சியை நீங்கள் வசதியாகவும், எளிதாகவும் செய்திடலாம். இந்த பயிற்சியை செய்ய முதலில் தரை அல்லது படுக்கையில் வசதியாக உட்காரவும். பின் இடுப்பை நேராக வைத்து வலது பக்கமாக திருப்பவும், பின்னர் இதே முறையில் இடது பக்கமும் திருப்ப வேண்டும். இந்த பயிற்சியை குறைந்தது 3-4 நிமிடங்களாவது செய்ய வேண்டும்.

walking workout

நடைப்பயிற்சி

உணவுக்கு பிறகு உடனே படுக்கைக்கு செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. இரவு உணவுக்கு பிறகு 10-15 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வேகமாக நடக்காமல் பொறுமையாக, நிதானமாக நடக்கலாம். இந்த பயிற்சியைத் தவிர, மற்ற அனைத்துப் பயிற்சிகளையும் படுக்கைக்குச் செல்வதற்கு 70 முதல் 90 நிமிடங்களுக்கு முன் செய்யவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP