
இந்தியாவில் வாஸ்து சாஸ்திரங்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் கணிசமான அளவு இருக்கின்றனர். நம்மைச் சுற்றியுள்ள ஆற்றல்கள் நமது நிதி நிலைமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாஸ்துவில் நம்பப்படுகிறது. அந்த வகையில், நமது நிதி இலக்குகளை மேம்படுத்த ஒரு அமைதியான மற்றும் வளமான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
மேலும் படிக்க: உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி தேவலாய திருவிழா; சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நாம் வசிக்கும் இடத்தை சரியாக வடிவமைப்பதன் மூலம், நமது நிதி இலக்குகளை அடைய முடியும் என்று கூறப்படுகிறது. இதில் நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து கூறுகள் உள்ளன. இந்த ஐந்து கூறுகளையும் சமநிலையில் வைத்திருப்பது நாம் வாழும் அல்லது பணிபுரியும் இடத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அதன்படி, நம் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
நாம் வாழும் அல்லது பணிபுரியும் இடத்தை சுத்தமாகவும், தேவையில்லாத பொருட்களை சேர்த்து வைக்காமலும் இருப்பது எப்போதும் நல்ல ஆற்றலை ஈர்க்கும். மேலும், வீட்டின் வடக்கு திசை சுத்தமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு திசை குபேர பகவானுடன் தொடர்புடையது. இந்து புராணங்களில் குபேரன் செல்வத்தின் கடவுள். இந்த திசை வாய்ப்புகளையும், பண வரவையும் குறிக்கிறது.
வீட்டின் வடக்கு திசையில் சமையலறை அமைப்பதை தவிர்க்கவும். இது வளர்ச்சி மற்றும் பணத்திற்கான வாய்ப்புகளில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், எரிவாயு அடுப்பும், சிங்க்கும் அருகருகே இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், இடையில் ஒரு தடுப்பு அமைப்பது நல்லது.

மேலும் படிக்க: 100 பெண் குழந்தைகளுக்கான அழகிய மற்றும் புதுவிதமாக முருகன் தமிழ் பெயர்களை பார்க்கலாம்
வீட்டின் வடக்கு திசையில் ஒரு சிறிய நீரூற்றை (water fountain) வைப்பது மிகவும் நன்மை அளிக்கும். நீரூற்றில் இருந்து பாயும் நீர், பண வரவுடன் தொடர்புடையது. இதைப் பின்பற்றுவது நிதி தடைகளை நீக்கி, பண வரவை மேம்படுத்தும். நீரூற்றில் எந்த விளக்குகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தென்-கிழக்கு திசையில் சமநிலையற்ற ஆற்றல் இருந்தால், அதை செம்பு அல்லது சிவப்பு நிற பெயிண்டிங் பயன்படுத்தி மேம்படுத்தலாம். மேலும், ஓவியங்கள், திரைச்சீலைகள் போன்ற நெருப்பு கூறுகளை குறிக்கும் பொருட்களை இந்த திசையில் வைப்பது சமநிலையை ஏற்படுத்த உதவும்.
ஸ்திரத்தன்மைக்கு, தென்-மேற்கு திசை சிறந்ததாகக் கருதப்படுகிறது. லாக்கர்கள் அல்லது பணப் பெட்டிகளை இந்த திசையில் வடக்கு நோக்கி வைப்பது நல்லது. இது சாத்தியமில்லையென்றால், ஒரு உண்டியலில் சிறிது பணத்தை சேமித்து இந்த திசையில் வைக்கலாம். இது சேமிப்பை அதிகரித்து நிதி ஸ்திரத்தன்மையையும் அளிக்கும்.
வீட்டின் பிரதான வாசலை சுத்தமாக வைத்து, நேர்த்தியாக அலங்கரிக்க வேண்டும். இது பலரும் சுப நாட்களில் செய்யும் ஒரு விஷயம். நேர்மறை ஆற்றலை வரவேற்க இது உதவுகிறது. இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பண அதிர்ஷ்டத்திற்காக நேர்மறை ஆற்றலை உங்கள் வீட்டிற்குள் எப்போதும் வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com