Sunlight Benefits: 30 நிமிடம் சூரிய ஒளியில் இருந்தால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற ஆற்றல்கள்

காலை நேர சூரிய ஒளியில் 30 நிமிடம் அமர்ந்திருப்பதால் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை நமது மனநிலை, தூக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

Morning sunlight benefits time

ஒவ்வொரு காலையிலும் சூரியனின் கதிர்களுடன் நமது புதிய நாள் தொடங்குகிறது. ஒரு புதிய நாள் புதிய நம்பிக்கைகளையும் புதிய வாய்ப்புகளையும் தருகிறது. அதே வேலையில் சூரிய ஒளியும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தாவரங்கள் மற்றும் மரங்கள் அவற்றின் உணவை உருவாக்குவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாகும். அதே போல் சூரிய ஒளியில் இருந்து நமக்கு வைட்டமின் டி கிடைக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதைத் தவிர்த்து காலையில் 30 நிமிடங்கள் சூரிய ஒளியை எடுத்துக் கொண்டால், அதன் மூலம் நம் உடல் பல நன்மைகளைப் பெறலாம். காலை சூரிய ஒளி நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தகவல் அளித்துள்ளார். காலையில் 30 நிமிடம் சூரிய ஒளியை எடுத்துக்கொள்வது ஏன் முக்கியம், அதன் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

சூரிய ஒளியின் காரணமாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

sunlight  inside

நம் உடலில் பல ஹார்மோன்கள் உள்ளன. உடல் சீராக செயல்பட, உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பது அவசியம். உடலில் எந்த ஒரு ஹார்மோனின் அதிகப்படியான அல்லது குறைபாடாக செயல்பட்டால் அது உடலுக்கு பிரச்சனைகளை உருவாக்கும். ஹார்மோன் சமநிலையில் இருக்க சூரிய ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் சூரிய ஒளியை 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால். நம் உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோனைக் குறைத்து, மெலடோனின் ஹார்மோனை அதிகரிக்கிறது. இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.

கார்டிசோல் ஹார்மோன் என்றால் என்ன?

கார்டிசோல் ஹார்மோன் என்பது மன அழுத்த ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலில் சமநிலையுடன் இருப்பது மிகவும் முக்கியம். நமது உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இதன் அதிகரிப்பு உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இது நம் மனநிலையை பெரிய அளவில் கட்டுப்படுத்துகிறது. இது தவிர இரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலை வேளையில் நமது உடலில் இதன் உற்பத்தி அதிகமாகும். அதுபோன்ற நிலையில் காலையில் சூரிய ஒளியை எடுத்துக்கொள்வதன் மூலம் குறைகிறது.

மெலடோனின் ஹார்மோன் என்றால் என்ன?

sunlight new  inside

மெலடோனின் ஹார்மோன் நமது தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி தினமும் காலையில் சூரிய ஒளியில் அரை மணி நேரம் உட்கார்ந்தால் இருப்பதால் உடலில் மெலடோனின் அளவை அதிகரிக்கிறது. இது நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: உடலுக்கு தேவையான சத்துகளை ஒளித்து வைத்திருக்கும் லிச்சி விதைகள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP