herzindagi
How I cured my anemia

Iron Deficiency Remedies: இரும்புச்சத்து குறைபாட்டை போக்கும் இந்த மேஜிக் பொடியை வீட்டில் எளிதாக செய்யலாம்

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டுடன் அதிகம் போராட வேண்டியுள்ளது. இந்த குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது என்பதை பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-07-24, 22:00 IST

இரும்புச்சத்து பெண்களுக்கு மிகவும் முக்கியம். உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் அதை இரும்புச்சத்து குறைபாடு என்று கருதப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு சோர்வு, பலவீனம், தோல் வெண்மை, மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு இதுபோன்று நடந்தால் அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்கிறது. இரும்புச்சத்து குறைபாடு நீண்ட காலம் பெண்களுக்கு நீடித்தால் உயிருக்கு ஆபத்தில் கொண்டு செல்கிறது. அரிவாள் செல் அனீமியா, அப்லாஸ்டிக் அனீமியா போன்ற தீவிர நோய்களும் ஏற்படலாம்.

மேலும் படிக்க:  உடலுக்கு தேவையான சத்துகளை ஒளித்து வைத்திருக்கும் லிச்சி விதைகள்

இரும்புச்சத்து குறைபாட்டிற்கு பொது சுகாதார மையத்தில் மருத்துவர்கள் பெண்கலுக்கு மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் உணவின் உதவியுடன் அதை குணப்படுத்தலாம். இது தொடர்பான தகவல்களை ஆயுர்வேத மருத்துவர் திக்ஷா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம். ஹீமோகுளோபின் ஆற்றல் நிலை மற்றும் செரிமானத்தை அதிகரிக்க இது ஒரு வகையான வாய் ப்ரெஷ்னர் ஆகும். இந்த ரெசிபியை எந்த வயதினரும் சாப்பிடலாம் இவை இரும்புச் சத்து குறைபாட்டை நீக்குவதோடு, சருமம் மற்றும் கூந்தலை மேம்படுத்தவும் உதவுகிறது.

தேவையான பொருள்கள் 

Amla inside

  • நெல்லிக்காய்
  • பீட்ரூட்
  • கருப்பு உப்பு

நெல்லிக்காய் வைட்டமின்-சியின் ஒரு நல்ல மூலமாக இருப்பதால் இரும்புச்சத்து உடலில் நன்கு உறிஞ்சப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது மற்றும் இதன் காரணமாக உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் செரிமானமும் நன்றாக இருக்கும். இது முடி உதிர்தலுக்கு நல்ல பழம் தைராய்டு பிரச்சனைகள், அசிடிட்டி மற்றும் சரும பிரச்சனைகளுக்கும் நல்லது. நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியமும் உள்ளது. இதை தவிர ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான பல ஊட்டச்சத்துக்கள்  உள்ளது. இரத்தத்தை அதிகரிக்க பீட்ரூட்டை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்தையும், இரத்த சிவப்பணுக்களையும் மேம்படுத்தும்.

இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க மௌத் ப்ரெஷ்னர் செய்முறை

beet root inside

  • 10 நெல்லிக்காய் மற்றும் 3 பீட்ரூட்டை அரைக்கவும்.
  • அதை ஒரு தட்டில் வைத்து 1 தேக்கரண்டி கருப்பு உப்பு சேர்க்க வேண்டும்.
  • இதனை 3-4 நாட்கள் வெயிலில் உலர வைக்க வேண்டும்.
  • வெயிலில் காயவைக்கலாம் அல்லது மழைக்காலத்தில் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். வீட்டில் வைத்து உலர வைக்கும் நிலையில் ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கலாம். வெயிலில் உலர்த்தும் போது மஸ்லின் துணியைப் போடலாம். நன்கு உலர்த்தி காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.
  • மௌத் ப்ரெஷ்னரை அறை வெப்பநிலையில் 6 மாதங்கள் வரை சேமிக்கலாம். அதை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம் மற்றும் அதிக அளவில் செய்து வீட்டில் சேமித்து வைக்க வேண்டாம், தேவைக்கேற்ப வைத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் இல்லை என்றால் நெல்லிக்காய் பவுடரைப் பயன்படுத்தலாம்.ஆனால் முடிந்த வரை புதிய நெல்லிக்காய் வைத்து செய்ய முயற்சிக்கவும்.
  • காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு மூன்று முறை மௌத் ப்ரெஷ்னரை 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளலாம். இதை வெறும் வயிற்றிலும் எடுத்துக் கொள்ளலாம்.
  • நெல்லிக்காய் கிடைக்கவில்லை என்றால் வேகவைத்த பீட்ரூட்டில் 1 சிட்டிகை நெல்லிக்காய் தூள் மற்றும் 1 சிட்டிகை கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு சாலட் போல் சாப்பிடுங்கள். 

மேலும் படிக்க:  உலர் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியும்... ஆனால் சாப்பிடக்கூடிய சிறந்த நேரம் தெரியுமா?

  • குறைந்த ஹீமோகுளோபின் உள்ளவர்கள், முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள், சோர்வாக உணருபவர்கள், அஜீரணம் உள்ளவர்கள் அல்லது இரும்புச் சத்து மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com