சாப்பிட்டவுடனே வயிறு உப்புசமா? நிவாரணம் பெற இந்த தண்ணீரை ட்ரை பண்ணுங்க!

உணவு சாப்பிட்ட உடனே வயிறு உப்புசமாக உணர்கிறீர்களா? இதிலிருந்து விடுபட உதவும் ஒரு எளிமையான வீட்டு வைத்தியத்தை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்…

experts infused water to get rid of bloating problem

உணவிற்குப் பிறகு உப்புசம், வயிற்று வலி அல்லது தசை பிடிப்புகளை ஒரு சிலர் உணர்கிறார்கள். செரிமானம் சீராக நடைபெறாத நிலையில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் குறைவாக சாப்பிடும் பொழுதும் இது போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் உண்டாகின்றன. வயிற்று உப்புசத்திற்கு தீர்வு தரும் பல எளிமையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இருப்பினும் இவை தொடரும் பொழுது மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.

வயிற்று உப்புசத்திற்கான ஒரு எளிமையான தீர்வை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். உப்புசத்தை போக்கும் தண்ணீர் பற்றிய தகவல்களை உணவியல் நிபுணரான மன்பிரீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்ஃபியூஸ்டு தண்ணீரின் நன்மைகள்

bloating home remedy

  • உணவிற்குப் பிறகு ஏற்படும் உப்புசத்தை போக்க எலுமிச்சை, வெள்ளரி, இஞ்சி, சியா விதைகள் மற்றும் புதினாவை கொண்டு இன்ஃபியூஸ்டு தண்ணீர் செய்து குடிக்கலாம்.
  • குடிக்கும் நீரில் இது போன்ற ஆரோக்கியமான மூலிகைகள் மற்றும் விதைகளை சேர்த்து இந்த இன்ஃபியூஸ்டு தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.
  • ஆரோக்கியமான விஷயங்களை குடிநீரில் சேர்க்கும் பொழுது அதன் சுவையும் தரமும் மேம்படும்.
  • இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
  • புதினா இலைகளில் உள்ள மெந்தோல் உணவு கால்வாயின் தசைகளை தளர்த்தி உப்புசம் மற்றும் வாயுவை குறைக்கிறது.
  • வெள்ளரிக்காய் வயிற்றை குளிர்வித்து, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதுடன் அஜீரண பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.
  • சியா விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரம் ஆகும். இது மலச்சிக்கலை குறைக்கிறது.
  • எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான சாறுகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.
  • இந்த தண்ணீரை பருகி உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றலாம்.
  • இது உணவிற்குப் பிறகு ஏற்படும் வயிற்று உப்புசத்தை குறைக்கிறது. கோடை காலத்தில் இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிக்கலாம்.

இன்ஃபியூஸ்டு தண்ணீர் செய்முறை

infused water for blaoting

தேவையான பொருட்கள்

  • வெள்ளரி 3-4 துண்டுகள்
  • இஞ்சி - அரை அங்குலம்
  • சியா விதைகள் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை 3-4 துண்டுகள்
  • புதினா 8-10 இலைகள்
  • தண்ணீர் - 800 மிலி

செய்முறை

  • சியா விதைகளை சில நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • ஒரு கண்ணாடி பாட்டிலில் சியா விதைகள் மற்றும் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
  • இந்த நீரை 2-3 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.
  • இதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.
  • உணவிற்குப் பிறகு ஏற்படும் வயிற்று உப்புசத்தை போக்க இந்த நீர் உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, ஜாதிக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP