
கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் பெரும்பாலானோர் தினசரி பல மணிநேரம் வேலை பார்ப்பதால், கண் சோர்வு அதிகரித்து வருகிறது. நீண்ட நேரம் டிஜிட்டல் திரையை பார்ப்பதால் மங்கலான பார்வை, தலைவலி, கண்களில் நீர் வடிதல் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இதை எதிர்த்து போராட, 20-20-20 என்ற விதிமுறையை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் எளிமையானது தான். அதன்படி, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை, 20 வினாடிகளுக்கு பார்க்க வேண்டும். இந்த எளிய வழிமுறை பல நன்மைகளை கொடுக்கிறது.
இந்த சிறிய இடைவெளி கண் தசைகளை ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. அருகிலுள்ள பொருட்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவதால் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. ஓய்வு இல்லாமல் நீண்ட நேரம் டிஜிட்டல் திரையில் கவனம் செலுத்துவதற்காக நம் கண்கள் வடிவமைக்கப்படவில்லை என்பதே இந்த விதியின் அடிப்படையாகும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பார்வையை மாற்றுவதன் மூலம், அருகில் பார்க்கும் தீவிரமான வேலையிலிருந்து கண்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறது.

மேலும் படிக்க: World heart day: உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமானால் இந்த உணவுகளை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்
கண் தசைகளில் உள்ள இறுக்கத்தை குறைப்பதன் மூலம் சோர்வு நீங்குகிறது. நீண்ட நேரம் டிஜிட்டல் திரையில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் தலைவலி மற்றும் உடல் சோர்வு குறையும். கண் அசௌகரியம் மற்றும் வறட்சி குறைவதால், வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். அதிக டிஜிட்டல் திரை நேரத்துடன் தொடர்புடைய ஆரம்பகால பார்வை பிரச்சனைகளின் அபாயத்தை இது குறைக்கிறது.
மேலும் படிக்க: Weight loss tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த 6 டிப்ஸை அவசியம் ஃபாலோ பண்ணுங்க
இன்றைய பரபரப்பான சூழலில், இது போன்ற சிறிய நடைமுறைகளை மறந்து விடுவது எளிது. உங்கள் தொலைபேசியில் நினைவூட்டல்களை (Reminders) அமைப்பது அல்லது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் அலாரம் பயன்படுத்துவது இதனை பின்பற்ற உதவும்.

20-20-20 விதிமுறை என்பது உங்கள் வழக்கமான கண் பரிசோதனைகள் போன்றவற்றுக்கு மாற்றாக இருக்காது. ஆனால், இது தினசரி வாழ்க்கையில் டிஜிட்டல் திரை மூலம் ஏற்படும் கண் சோர்வை குறைக்க ஒரு பயனுள்ள வழியாகும். இந்த டிஜிட்டல் யுகத்தில் திரை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த எளிய பழக்கத்தை ஏற்றுக்கொள்வது உங்கள் கண்களை ஆரோக்கியமாகவும், கூர்மையாகவும் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com