வீட்டுக்குள் தனித்து இருப்பது, வெளியே செல்வதை தவிர்ப்பது, கஷாயம் போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்வது, நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது, தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது போன்ற விஷயங்களை கடைப்பிடித்தால் போதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். மேற்கூறிய விஷயங்கள் யாவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவினாலும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மூலிகைகளை எடுத்துக் கொள்வதையும் வழக்கமாகி கொள்ள வேண்டும். அந்த வகையில் ஜாதிக்காய் ஏராளமான ஆரோக்கிய மற்றும் அழகு சார்ந்த நன்மைகளை வழங்குகிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த ஜாதிக்காய் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த தகவல்களை மருத்துவர் மந்தீப் சிங் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
ஜாதிக்காய் எனும் ஆயுர்வேத மூலிகையில் சக்தி வாங்கிய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை உறுதி செய்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: உங்கள் குழந்தையின் மூளை சுறுசுறுப்பாக இருக்க, இந்த உணவுகளை சாப்பிடக் கொடுங்கள்!
ஜாதிக்காய் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும். இது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள மகத்தான குணங்கள் வாத மற்றும் கபதோஷங்களை சமநிலைப்படுத்தவும், சிறந்த செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் பித்த தோஷத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
ஜாதிக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரைப்பை பிரச்சனைகள், அசிடிட்டி, வாயு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. இது வயிற்றுப்போக்கு பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் பெற உதவும்.
ஜாதிக்காய் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமாகும். இவை ஃப்ரீ ரெடிகல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கின்றன.
இதய நோய், நீரிழிவு, கீல்வாதம் உள்ளிட்ட பல தீங்கு விளைவிக்கும் உடல் நல பிரச்சனைகள் நாள்பட்ட அழற்சியுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஜாதிக்காயில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் வாயு தொந்தரவால் ஏற்படும் அழற்சி எதிர்வினைகள் மற்றும் வலியை குறைக்க உதவுகின்றன.
இதனுடன் ஜாதிக்காயில் வலியைக் குறைக்கும் திறன், அஜீரணத்தை எளிதாக்குதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வாய்வழி பிரச்சனைகளை நீக்குதல், அறிவாற்றல் செயல்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் போன்ற ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.
ஒரு சூடான கப் பாலில், இரண்டு சிட்டிகை ஜாதிக்காய் பொடி மற்றும் அரை டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கலாம். இந்த கலவையானது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும். இதனை அளவோடு எடுத்துக் கொண்டு பயன்பெறுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான முறையில் தொப்பை மற்றும் எடையை குறைப்பதற்கான ஆயுர்வேத தீர்வு!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com