உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவை தேடுகிறீர்களா? பல நன்மைகள் அடங்கிய மாதுளை பழ சாறை முயற்சி செய்து பாருங்கள். மாதுளை சாறில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இந்த அற்புதமான ஆரோக்கிய பானத்தை குடிப்பதால் பின்வரும் நன்மைகளை பெறலாம்.
மாதுளையில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றன. இது உங்கள் பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை சர்க்கரை சேர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான முறையில் தொப்பை மற்றும் எடையை குறைப்பதற்கான ஆயுர்வேத தீர்வு!
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடல் அழற்சி நோய் போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறவும் மாதுளை சாறு உதவும். இதில் உள்ள கலவைகள் குடலில் நல்ல பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் செரிமான மண்டலத்தில் ஏற்படும் எரிச்சலையும் குறைக்கும். மாதுளையில் உள்ள நார்ச்சத்து சில செரிமான பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) படி, மாதுளை புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவும். மாதுளை சாறில் புற்றுநோய் செல்களை அழிக்க அல்லது உடலில் அவற்றின் வளர்ச்சியை குறைக்க உதவும் கலவைகள் உள்ளதாக பல சோதனைக் குழாய் ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மாதுளை சாறை குடிப்பது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பின் அபாயத்தை குறைக்கவும் உதவும். மேலும் இதில் உள்ள கலவைகள் இரத்த அழுத்தம் மற்றும் தமனி அழற்சியை குறைக்க உதவுகின்றன. இதனுடன் இதயம் தொடர்பான மார்பு வலி, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு காரணமான அடைப்பின் வளர்ச்சியையும் தடுக்கலாம்.
கிரீன் டீயுடன் ஒப்பிடும்போது மாதுளை சாறு மூன்று மடங்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் செயல்பாட்டைக் காட்டுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். ஏனெனில் இதில் உள்ள பாலிபினால்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
மாதுளைச் சாறில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. இதில் உள்ள கூறுகள் கீல்வாதத்தை உண்டாக்கும் என்சைம்களை தடுக்கின்றன மற்றும் குருத்தெலும்பு சிதைவை தாமதிக்கின்றன.
தீங்கு விளைவிக்கும் கலவைகள், மாசுபாடு மற்றும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்களுக்கு சருமம் வெளிப்படுகிறது. மாதுளை சாறு குடிப்பது உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்க உதவும், ஏனெனில் இதில் உள்ள கலவைகள் சருமத்தில் நச்சுக்களின் உற்பத்தியை தடுக்கின்றன.
மாதுளை சாறு குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கற்கள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.
மாதுளைச் சாறில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இருப்பினும் பக்க விளைவுகளை தடுக்க, இதனை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: உங்கள் குழந்தையின் மூளை சுறுசுறுப்பாக இருக்க, இந்த உணவுகளை சாப்பிடக் கொடுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com