Gut Health Tips : குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எட்டு எளிய வழிகள்

உடல்நலன் காப்பத்தில் குடல் ஆரோக்கியமும் முக்கியத்துவம் பெறுகிறது. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சில எளிய வழிகள் இங்கே…

improve gut health
improve gut health

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவது மிகவும் அவசியம். உடலில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றாலே உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இதில் குறிப்பாக குடல் ஆரோக்கியம் முக்கியமானது. உங்களது குடல் ஆரோக்கியமாக இருக்கிறதா ? செயல்பாடு சீராக உள்ளதா ? என்பதை தெரிந்துகொள்ள பத்து அறிகுறிகள் இருக்கின்றன. இந்த விஷயங்களில் பிரச்சினை இருந்தால் உங்களது குடல் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம். மேலும் இவற்றை சரி செய்வதற்கு எளிய வழிமுறைகளும் உள்ளன.

tips for a healthier gut

  • குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான முதல் அறிகுறி நீங்கள் எதை சாப்பிட்டாலும் வயிற்றில் வாயு உண்டாவதாகும். அதேபோல உப்புசம் ஏற்படும், மலச்சிக்கல் இருக்கும்.
  • இதுவரை நீங்கள் உட்கொண்டு வந்த உணவுகள் திடீரென பிரச்சினையை ஏற்படுத்தினால் குடல் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்.
  • காரணமின்றி எடை குறைவது ஆரோக்கியமற்ற குடலுக்கான அறிகுறியாகும் அல்லது உடல்எடை அதிகரித்து கொண்டே இருப்பதும் குடலில் பிரச்சினை இருப்பதை குறிக்கிறது.
  • வாய் துர்நாற்றம், நாக்கின் இயல்பான நிறம் மாறி மஞ்சள் நிறத்தில் படலம் தெரிவதும் ஆரோக்கியமற்ற குடலுக்கான அறிகுறிகள்.
  • இரத்த சோகை, எலும்பு தேய்மானம் ஆகியவற்றுக்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு.
  • அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என அர்த்தம். சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துகளை பிரிக்கும் அளவிற்கு குடல் செயல்படவில்லை என புரிந்துகொள்ளுங்கள்.
  • சீரான மன நிலையில் இருக்க முடியவில்லை, அடிக்கடி மனச்சோர்வு, படபடப்பு ஏற்படுகிறது என்றால் இவை குடல் ஆரோக்கியம் இல்லாததன் எதிர்மறையான தாக்கம் ஆகும்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்

  • சரிவிகித உணவுமுறை : நீங்கள் சாப்பிட பயன்படுத்தும் தட்டில் பாதி பழக்கங்கள், காய்கறிகள், கால்வாசி மாவுச்சத்து உணவுகள் இருக்க வேண்டும். மாவுச்சத்து என்றால் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி. மீதி கால்வாசி சுண்டல் போன்ற சைவ புரதம் அல்லது நீங்கள் அசைவம் சாப்பிடும் நபர் என்றால் முட்டை, சிக்கன் போன்றவை இருக்க வேண்டும்.
  • நொதித்தல் செயல்பாடு மூலம் உருவான தயிர் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள்.
  • சர்க்கரை அதிகம் இருக்கும் உணவுகள், இனிப்புகளை சாப்பிடும் போது ஒரு விதமான ஏப்பம். எந்த வித சர்க்கரையாக இருந்தாலும் குடல் ஆரோக்கியத்திற்காக அதை உணவுமுறையில் குறைத்துவிடுங்கள்.
  • தினமும் மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் குடியுங்கள்.
  • மன அழுத்தம், வெறுப்பு ஆகியவையும் உங்களை சரியாக சாப்பிட விடாது. இதனால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே உடற்பயிற்சி செய்து மன அழுத்தத்தை குறைக்கவும்.
  • தினமும் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் தூங்கி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும்.
  • புகைப்பிடித்தல், மது அருந்துதல் குடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த தீய பழக்கங்களை விட்டுவிடுங்கள்.
  • நீங்கள் அடிக்கடி வெளியே சாப்பிடும் நபராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு மாத்திரை சாப்பிடவும்.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP