Fatty liver disease : கொழுப்பு கல்லீரல் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருந்தால் எதை சாப்பிடலாம் ? எதை சாப்பிடக் கூடாது என சந்தேகத்தை தீர்ப்பதற்காகவே இந்தக் கட்டுரை. 

Fatty Liver

கொழுப்பு கல்லீரல் பிரச்சினை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என அழைக்கப்படுகிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு சேரும்போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. உங்கள் கல்லீரலில் சிறியளவு கொழுப்பு இருந்தால் பிரச்சினை கிடையாது, ஆனால் கொழுப்பு அதிகமாக இருந்தால் அது உடல்நலப் பிரச்சினையாக மாறும். ஏனென்றால் உங்கள் உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல் தான்.

கல்லீரல் நீங்கள் சாப்பிடும் உணவும் மற்றும் குடிக்கும் பானங்களில் இருந்து ஊட்டச்சத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டுகிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு இருந்தால் வீக்கம் ஏற்படும். கொழுப்பு கல்லீரல் பிரச்சினை சரி செய்யப்படவில்லை என்றால் அது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

Alcohol issues

சாப்பிடக் கூடாதது

  • கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் பிற கல்லீரல் நோய்களுக்கு மது அருந்துவது முக்கிய காரணமாக இருக்கலாம்.
Say no to sugar
  • கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருக்கும் போது சர்க்கரை அதிகம் கொண்ட மிட்டாய், குக்கீ, சோடா மற்றும் பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கல்லீரலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்.
  • அதிகமாக உப்பு உட்கொள்வதும் கொழுப்பு கல்லீரல் பிரச்சினையை அதிகமாக்கிவிடும். இதனால் தினமும் 2,300 மில்லிகிராம்களுக்கும் குறைவாக உப்பு உட்கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தம் கொண்ட நபர்கள் தினமும் 1,500 மில்லிகிராம்களுக்கு மேல் உப்பு உட்கொள்ள கூடாது.
Pasta
  • ரொட்டி, பாஸ்தா போன்ற உணவுகளில் நார்ச்சத்தே இல்லாத அதிக பதப்படுத்தப்பட்ட அல்லது சுத்திரிகரிக்கப்பட்ட தானியங்கள் இருக்கின்றன.
Fried Snacks
  • இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பது மட்டுமல்லாமல், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் உருவாகவும் வாய்ப்பு அதிகம்.
  • மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகம் உள்ளது. கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருந்தால் எக்காரணம் கொண்டும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாது. அது உயிருக்கே ஆபத்தாகி விடும்.

சாப்பிட வேண்டியவை

வால்நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கு உதவும். வால்நட் சாப்பிடுவது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.

மேலும் படிங்கNo to Alcohol : சரக்கு அடிக்காதீங்க பாஸ்! ஆபத்து ரொம்ப அதிகம்

கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் தங்கள் உணவில் அதிக காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு கல்லீரல் பிரச்சினைக்கு ப்ரோக்கோலி ஒரு காய்கறி ஆகும். இது உடல் எடையை குறைக்க உதவும். கேரட், பூசணி, இலை கீரைகள், பீட்ரூட், காலிஃபிளவர், பச்சை வெங்காயம் மற்றும் செலரி போன்ற மற்ற காய்கறிகள் கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP