
ஆரோக்கியமான குடல் என்பது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல மனநிலை மற்றும் உற்சாகமான ஆற்றல் ஆகியவற்றுடன் நேரடி தொடர்புடையது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தினமும் நீங்கள் தவறாமல் உண்ண வேண்டும்.
அதன்படி, உங்கள் குடல் ஆரோக்கியத்தை எளிதாக மேம்படுத்தக் கூடிய சில வகையான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் உடலின் ஆற்றலும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க: மழைக்காலத்தின் போது நோய்த் தொற்றுகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கான 5 முக்கிய குறிப்புகள்
புரதச்சத்து நிறைந்த சிற்றுண்டியாக கருதப்படும் வறுத்த கொண்டைக்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. சுமார் 100 கிராம் வறுத்த கொண்டைக்கடலையில் 12 கிராமுக்கு மேல் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் இயக்கத்தை வலுப்படுத்துவதுடன், தேவையற்ற அசிடிட்டி (Aciditiy) ஏற்படுவதையும் குறைக்கிறது.

ஆப்பிளுடன் ஒப்பிடும் போது கொய்யாப்பழத்தில், ஏறத்தாழ இரண்டு மடங்கு நார்ச்சத்து உள்ளது. இதில் உள்ள விதைகள் குடலுக்கு ஒரு இயற்கையான சுத்தப்படுத்தும் கருவியாக செயல்பட்டு, கழிவுகளை சீராக வெளியேற்ற உதவுகிறது. உங்கள் உணவில் கொய்யாப்பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் சுவையுடன் சேர்த்து, ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தலாம்.
சிறுநீரக ஆரோக்கியத்திற்காக அறியப்படும் வாழைத்தண்டில், கரையாத நார்ச்சத்து (Insoluble Fibre) நிரம்பியுள்ளது. இதனை சாறாகவோ அல்லது பொரியலாகவோ செய்து உண்பது, வயிறு உப்புசத்தை (Bloating) குறைக்கவும், பெருங்குடலை சுத்தம் செய்யவும் பெரிதும் துணைபுரிகிறது.
மேலும் படிக்க: அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? இவற்றை மிஸ் பண்ணாதீங்க; ஹீமோகுளோபின் அளவை ஈசியா அதிகரிக்கலாம்
இதில் உள்ள பப்பேன் (Papain) என்ற என்சைம் செரிமானத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, பப்பாளி காயில் உள்ள நார்ச்சத்தும் செரிமான மண்டலத்திற்கு வலிமை சேர்க்கிறது. இதனை சாலட் அல்லது குழம்பாக சமைத்து சாப்பிடுவது, செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க பெரிதும் உதவும்.

ஊறவைத்த சப்ஜா விதைகளில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்த நார்ச்சத்து உள்ளது. இவை ப்ரீபயாடிக்குகளாக (Prebiotics) செயல்பட்டு, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிப்பதன் மூலம் குடல் எரிச்சல் அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன.
இந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்வது, உங்கள் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும், அதன் மூலம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com