Prolonged Sitting : அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் தீவிரமான பிரச்சினைகள்

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது உடலுக்கு ஆபத்தாகும். வீட்டில் இருந்தே வேலை செய்யும் கலாச்சாரத்தால் இது தீவிர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

sitting risks
sitting risks

கொரோனா பேரிடருக்கு பிறகு வீட்டிலே இருந்தே செய்யும் கலாச்சாரம் பெருகி விட்டது. நிறுவனங்களும் நிர்வாக செலவினை குறைக்கும் பொருட்டு பெரும்பாலான பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கிறது. முன்பை விட தற்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அதிகமானதால் பெரியளவில் ஒரு பிரச்சினை உருவெடுத்து வருகிறது. அலுவலத்தில் வேலை செய்பவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்க வாய்ப்புண்டு.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைபார்க்கும் நபர்களுக்கு அலுவலக நோய்க்குறி இருப்பதாக சொல்லப்படுகிறது. கழுத்து வலி, முதுகு வலி, கை வலி, கழுத்தில் இருந்து கை முழுவதும் வலி பரவல், கை மற்றும் கால் மரத்து போவது, சோர்வாக உணர்வது, இடுப்பு பகுதியில் வலி என இவை அனைத்தும் ஒரு நபருக்கு இயல்பாக ஏற்படும் பிரச்சினைகள் தான். ஆனால் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் மேற்கண்ட பிரச்சினைகள் வந்தால் அதை அலுவலக நோய்க்குறி என்று சொல்கிறோம்.

risks of prolonged sitting

புதிய வேலை முறையினால் நவீன கால நோய் அலுவலக நோய்க்குறி உருவெடுத்துள்ளது. இதை பற்றி நாம் பயப்பட்ட வேண்டிய அவசியம் இல்லை. உட்கார்ந்து வேலை பார்க்கும் 80 விழுக்காடு நபர்களுக்கு இது பிரச்சினையாக இருக்கிறது. பத்து மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து வேலை பார்த்தால் கண்டிப்பாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். முதுகில் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வந்தால் அது வேறு காரணங்களால் இருக்கலாம்.

மேலும் படிங்கஉலகில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொடூர வைரஸ்கள்

அலுவலக நோய்க்குறி பிரச்சினையை தீர்ப்பதற்காக நாம் வேலையை விட்டுவிட முடியாது. ஆனால் சில விஷயங்களை செய்தால் 50 விழுக்காடு பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.

  • தினமும் காலை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். பத்து முதல் 12 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்வது உங்களது உடலை இயல்பான நிலையில் இருந்து மாற்றுவதாக அர்த்தம். நமது உடல் ஒன்றும் இயந்திரம் கிடையாது.
  • உடல் முழுவதையும் பயன்படுத்தி வேலை செய்வது நல்லது. ஆனால் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு நகராமல் வேலை செய்வது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
  • ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து எந்திரித்து நிற்கவும் அல்லது நடக்கவும்.
  • வீட்டில் இருந்தே வேலை பார்த்தாலும் அல்லது அலுவலகம் சென்று வேலை பார்த்தாலும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கணினி திரையில் இருந்து விலகி வேறு எங்கேயாவது பார்க்கவும்.
  • ஒரே இடத்தில் உட்கார்ந்து பணியாற்றுவதால் குடல் புற்றுநோய், வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர நிறைய வாய்ப்பு இருக்கிறது.
  • எனவே அதிகளவு தண்ணீர் குடிக்கவும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்.
  • இவற்றை பின்பற்றினால் அலுவலக நோய்க்குறி 50 விழுக்காடு குறைய வாய்ப்புண்டு.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP