
வாழ்க்கையின் பரபரப்பான ஓட்டத்திற்கிடையே, மன அமைதியை வளர்த்துக் கொள்வது அத்தியாவசியமான ஒன்றாகும். அமைதி என்பது எங்கேயோ வெளியில் தேடப்பட வேண்டியதல்ல. அது நாம் அன்றாடம் கடைபிடிக்கும் எளிய பழக்கவழக்கங்களில் உள்ளது.
அந்த வகையில், உங்கள் மனதை அமைதிப்படுத்தக் கூடிய செயல்கள் என்னவென்று இதில் காண்போம். இவற்றை நாள்தோறும் பழக்கப்படுத்தும் போது காலப்போக்கில் நல்ல மாற்றங்களை உணரலாம். இது மன அமைதி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துடனும் தொடர்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் நீங்கள் எப்படி இருக்க போகிறீர்கள் என்பதை, அன்றைய தினத்தின் முதல் 5 நிமிடங்கள் தீர்மானிக்கிறது. காலையில் எழுந்தவுடன் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை எந்த செயலிலும் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள். இந்த நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்கவும். அமைதியாக அமர்ந்திருப்பது, அன்றைய வேலைகள் குறித்து சிந்திக்க உதவும். இது உங்கள் மனதிற்குள் தெளிவையும், அமைதியையும் கொண்டு வரும்.

மேலும் படிக்க: ஜிம்முக்கு செல்ல நேரம் இல்லையா? உங்கள் வலிமையை அதிகரிக்கும் இந்த உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்
மூச்சுப் பயிற்சி என்பது மனநலன் மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம் சார்ந்தது ஆகும். தினமும் காலையில் தவறாமல் தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுங்கள். கண்களை மூடி, நீங்கள் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் ஒவ்வொரு சுவாசத்தையும் முழு கவனத்துடன் உணருங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து, உடனடி அமைதியை உங்களுக்கு அளிக்கும்.
மேலும் படிக்க: உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? இந்த 5 எளிய பயிற்சிகளை மேற்கொள்ளவும்
சுற்றுப்புறத்தின் ஒழுங்கு, மனக் குழப்பத்தை குறைக்க உதவுகிறது. ஒரே நேரத்தில் பெரிய இடத்தை சுத்தம் செய்யாமல், ஒரு சிறிய பகுதியை மட்டும் ஒழுங்கமைக்க தொடங்குங்கள். உங்கள் மேசை, புத்தக அலமாரி அல்லது மின்னஞ்சல் இன்பாக்ஸ் என ஏதேனும் ஒரேயொரு இடத்தை ஒரு நேரத்தில் ஒழுங்குபடுத்துங்கள். வெளிப்புறச் சூழலில் ஏற்படும் ஒழுங்கு, உங்கள் மனதிலும் அமைதியை உருவாக்கும்.
சமூக ஊடகத்தை அதிகமாக பயன்படுத்துவது நமது மன அமைதிக்கு ஒரு பெரிய தடையாகும். சமூக ஊடகங்கள் மற்றும் செல்போன் பயன்படுத்தும் நேரத்திற்கு எல்லைகளை நிர்ணயம் செய்யுங்கள். இதனை சரியாக கட்டமைக்கும் போது இயல்பாகவே நமக்கு மன அமைதி ஏற்படும்.
உங்கள் கவலைகளையும் உணர்வுகளையும் காகிதத்தில் எழுதுவது, மனதை குழப்பமில்லாமல் வைத்திருக்க உதவும். அதன்படி, உங்களின் கவலைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஒரு குறிப்பேட்டில் எழுதலாம். இவை உங்களின் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

இந்த எளிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நம்முடைய மன அமைதியை சீராக பராமரிக்க முடியும். இது நம்முடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com