குளிர்ந்த காற்றும், குறைவான வெப்பநிலையும் நமக்கு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. பெரியவர்கள் கூட எப்படியாவது சமாளித்துவிடுவோம். ஆனால் தற்போது உள்ள அளவுக்கு அதிகமான குளிர் குழந்தைகளைப் பல விதமான தொற்று நோய்களுக்கு வாய்ப்பாக அமைகிறது. குளிர்காலத்தில் குழந்தைகளை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் தொற்று நோய்கள் என்னென்ன என்பது குறித்தும் அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று பாதிப்புகள்:
- குளிர்காலத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் பல தொற்று நோய்களுக்கு வழிவகுக்கிறது. குளிர்ந்த காற்றின் காரணமாக குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை கரகரப்பு, காய்ச்சல் போன்ற உடல் நலப்பாதிப்புகள் ஏற்படுகிறது.
- குளிர்ந்த காற்று மற்றும் மழைக்காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது ஆர்.எஸ்.வி எனப்படும் சுவாசப்பாதை தொற்று. குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, இருமல், சளி, போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்போடு வைத்திருப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது.
- இந்த தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் உணவுகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை அதீத குளிர் நேரத்தில் குழந்தைகளை வெளியில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும். ஒருவேளை கண்டிப்பாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், ஸ்வெட்டர், மப்புலர் போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
- குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறதோ? இல்லையோ? பெரும்பாலும் சளித்தொல்லைத் தான் அவர்களுக்கு அதிகம் ஏற்படும். இரவில் தூங்க முடியாத அளவிற்கு பெரும் சிரமத்தை அவர்கள் சந்திப்பார்கள்.
- இந்த சமயத்தில் மருத்துவர்களின் அறிவுரையின் படி ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளவும். மேலும் வீடுகளில் துளசி, தூதுவளை, ஆடாதொடா,ஓமம் போன்றவற்றைப் பயன்படுத்தி கசாயம் காய்ச்சிக் கொடுக்கவும். அதிகளவு குடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஒரு 1 மில்லி அளவிற்கு கொடுத்தால் போதும்.
- வயிற்றுப்பிரச்சனை: பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது வயிற்று வலி, வயிற்றுப் போக்கு பிரச்சனைகள் தான். குடலைப் பாதிக்கும் நோரோ வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த பிரச்சனைக் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
- இந்த பாதிப்புகள் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் என்பதால் குளிர்காலத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
- குழந்தைகளுக்கு வறண்ட காற்று மற்றும் அதீத குளிரின் காரணமாக தோல் அரிப்பு, முகம் வறண்டு விடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே குளிர்ந்த காற்றில் குழந்தைகளை வெளியில் எடுத்துச் செல்லும் போது குளிர் தாங்கும் அளவிற்கான டவல்களைப் போர்த்திக் கொள்ளவும்.
- அதீத சளி மற்றும் இருமல் பிரச்சனையால் மூச்சு விட சிரமப்படும் குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதனுடன் சூடத்தைச் சேர்த்து நெஞ்சுப்பகுதியில் தடவி விடவும்.

- இல்லையென்றால் விரலி மஞ்சளை தீபத்தில் வாட்டி குழந்தைகளை லேசாக சுவாசிக்க விடவும். நோய்த் தொற்று ஏற்படும் சமயத்தில் தான் இதுப்போன்று செய்ய வேண்டும் என்பதில்லை. வாரத்திற்கு 2 முறை இவ்வாறு செய்வது குழந்தைகளை சளி பிடிப்பதைக் குறைக்கக்கூடும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation