
பெண்கள் எப்போதுமே தங்களின சருமத்தை அழகாக்கிக் கொள்வதற்கு பெரும் முயற்சி எடுப்பார்கள். கெமிக்கல் நிறைந்த சோப்புகள் மூலம் மட்டுமல்ல, பருவ கால மாற்றங்களும் முகத்தில் பொலிவை இழக்கச் செய்கிறது. குறிப்பாக வெயில் காலங்களை விட குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவது, உதடு வெடிப்பு, முகத்தில் ஆங்காங்கே கருமை நிறம் தோன்றுவது, வெள்ளை நிறத்தில் சொரி ஏற்படுவது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மேலும் படிக்க: அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்; உங்கள் வீட்டு சமையலறையிலேயே இவை இருக்கின்றன!
வெயில் காலங்களில் மட்டுமல்ல குளிர்காலங்களிலும் எப்போது வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரின் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த காற்று முகத்தை வறண்டு விட செய்வதோடு கருந்திட்டுகளையும் ஏற்படுத்திவிடும். இதற்கு பால் மற்றும் மஞ்சள் கலந்த பேஸ் பேக் பேருதவியாக இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பானங்கள்; இவற்றை அருந்தும் போது கவனம் தேவை
குளிர்ந்த காற்று வீசும் போது குடிப்பது முதல் குளிப்பது வரை வெந்நீரைத் தான் அதிகளவில் பயன்படுத்தவும். இது முற்றிலும் தவறு. குளிர்காலத்தில் சூடான நீரைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவினாலும் மற்றும் குளித்தாலும் சருமம் வறண்டு விடுவதோடு, சருமத்தில் அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே முடிந்தவரை வெந்நீரை முற்றிலும் தவிர்க்கவும். கொஞ்சம் மிதமான சூட்டில் பயன்படுத்துவது நல்லது.
குளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காது. இதனால் அதிகளவு தண்ணீர் அருந்துவதற்கு வாய்ப்பு இருக்காது. உடலில் நீர்ச்சத்து குறையும் போது உடல் நலம் மட்டுமல்ல சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்றாலும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவை சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: உங்கள் உதடுகள் வறண்டு போவதை தடுக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறை
குளிர்காலத்தில் எப்போது வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரின் பயன்படுத்த வேண்டும். இதோடு பப்பாளி,தக்காளி போன்ற பழ வகைகளைக் கொண்டு செய்யப்படும் பேஸ் பேக்குகளையும் மறக்காமல் பயன்படுத்த முயற்சி செய்யவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com