இன்றைய இயந்திர உலகில் ஓடிக்கொண்டிருக்கும் பலரும் சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மன அழுத்தம். வேலை, குடும்பம், சமூகம் என அனைத்துத் திசைகளிலிருந்தும் வரக்கூடிய பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் போது தான் மன அழுத்த நோய் ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த மன அழுத்தம் தற்கொலை எண்ணத்தைக் கூட தூண்டும்.
இதுப்போன்ற சூழலில் இருந்து விடுபட வேண்டும் என்றால், மருத்துவர்களிடம் செல்வதை விட உங்களது ஒட்டு மொத்த வாழ்க்கையிலும் பல மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் செயல்பாடுகள் தான் மன அழுத்தத்திலிருந்து விடுபட சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த உடல் செயல்பாடுகள் உங்களது உடலுக்கு மட்டுமில்லை, உங்களது மனதிற்கும் சிறந்ததாக அமையும். இதோ மன ஆரோக்கியத்திற்கான உடல் செயல்பாடுகள் என்னென்ன? அவற்றின் நன்மைகள் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
மன ஆரோக்கியத்திற்கான உடற்செயல்பாடுகள்:
- நடனம்: நாள் முழுவதும் அயராது உடல் உழைப்பு செய்பவர்களாக இருந்தாலும், கணினி முன்பாக அமர்ந்து பணியாற்றுபவர்களாக இருந்தாலும் மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். இவற்றிலிருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது நடனம். உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் போட்டு விட்டு அந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவது உங்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். எவ்வித சிந்தனையும் இல்லாமல் மூளையின் செயல்திறனை புத்துணர்ச்சியாக்குகிறது. மன ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த உதவுகிறது.
- நடைப்பயிற்சி: காலை வேளையில் நடைப்பயிற்சி செய்வது என்பது உங்களது உடல் நலத்திற்கு மட்டுமில்லை மன ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக உள்ளது. மிதமான குளிரில் காலையில் வாக்கிங் செல்லும் போது மூளை ப்ரஸ்ஸாக இருக்கிறது. இவ்வாறு செய்த பின்னதாக, நீங்கள் எந்த வேலை செய்தாலும் உங்களது மனம் பதட்டம் அடைய செய்யாது. எப்போதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
- யோகா: டென்ஷன்,கவலை,கோபம் அனைத்தையும் நமது மனதை எப்போதும் படபடப்புடன் வைத்திருக்கும். இதுப்போன்ற மனநிலையிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் யோகாசனம் சிறந்ததாக உள்ளது. இது உங்களது உடல் நலத்தையும் பாதுகாக்கிறது.

- நீச்சல்: நமது உடல் நலத்திற்கானப் பயிற்சிகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது நீச்சல். உங்களது மனதையும், மூளையையும் ஒருநிலைப்படுத்தும் விதமாக அமைவதால் தேவையில்லாத யோசனைகளைத் தவிர்ப்பீர்கள். இது உங்களது மன ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அமைகிறது. மனச்சோர்வு, பதட்டத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- சுற்றுலா செல்வது: மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மற்றொரு சிறந்த தேர்வாக அமைவது சுற்றுலா தான். பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செல்லும் போது மனதில் உள்ள கவலைகள் மறந்துவிடும். இயற்கையான இடங்களைத் தேர்வு செய்து பயணிக்கும் போது சுத்தமான காற்று உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தனிமையில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்குப் பிடித்ததோடு மட்டுமின்றி பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிங்க:வைட்டமின் சி யின் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் தெரிஞ்சா அசந்துப்போயிருவீங்க!
இதோடு மட்டுமின்றி புத்தகம் படிப்பது, தோட்ட பராமரிப்பு, பாடல்கள் கேட்பது, குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற பிடித்த விஷயங்களை மேற்கொள்ளுங்கள். இது உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation