நீரிழிவு நோய் பல்வேறு விதமான சிக்கல்களையும், கடுமையான உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம். நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் உணவு, பானங்கள் குறித்து பலருக்கு தெரிவதில்லை. அதில் மிக எளிமையான பொருளாக வெந்தய தண்ணீர் இருக்கிறது.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
முந்தைய நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலையில் அதன் நீரை அருந்துவதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். குறிப்பாக, இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்தக் கட்டுரையில் வெந்தயத் தண்ணீர் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தருகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள், குளுக்கோமன்னான் ஃபைபர் (glucomannan fibre) ஆகியவை சர்க்கரையை உடல் உறிஞ்சுவதை தாமதப்படுத்துகின்றன. மேலும், ஃபெனுக்ரெசின் (fenugrecin), ட்ரைகோனெல்லின் (trigonelline) போன்ற ஆல்கலாய்டுகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக அறியப்படுகிறது.
மேலும் படிக்க: உஷார் மக்களே: நாய்க்கடியால் பரவும் ரேபிஸ்; அறிகுறிகளும், தீர்வுகளும் இதோ!
இது மட்டுமின்றி மேலும் சில நன்மைகளும் வெந்தய தண்ணீர் மூலம் கிடைக்கின்றன. இவை பசியை குறைத்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கவும் வெந்தயத் தண்ணீர் உதவுகிறது. வெந்தய தண்ணீரை தொடர்ந்து அருந்துவது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தையும் இவை மேம்படுத்துகின்றன.
ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 முதல் 2 தேக்கரண்டி வெந்தய விதைகளை சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில், இதனை வடிகட்டி அருந்தலாம். எனினும், நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதோடு, தங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதித்து கொள்ள வேண்டும். எவ்வளவு வெந்தய தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com