herzindagi
image

மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு; மூக்கடைப்பு பிரச்சனையைத் தீர்க்க செய்ய வேண்டியது!

பருவ காலங்களுக்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. சில வாழ்வியல் நடைமுறைகளில் கட்டாயம் மாற்றம் செய்ய வேண்டும்.  
Editorial
Updated:- 2025-09-18, 14:41 IST

மழைக்காலம் வந்துவிட்டாலே சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பல தொல்லைகள் வந்து நம்மைப் பாடாய்ப்படுத்திவிடும். அதிலும் நன்றாக தூங்கும் போது ஏற்படும் மூச்சுவிடக்கூட முடியாத அளவிற்கு சிரமத்தை ஏற்படுத்தும். வீட்டில் ஒருவருக்கு வந்தால் போது சீசன் போன்று மாறி மாறி மற்றவர்களுக்கு வரக்கூடும். இந்த பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்றால் உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களையும், இயற்கை வைத்திய முறைகளையும் பின்பற்ற வேண்டும்? அவற்றில் சில உங்களுக்காக.

மேலும் படிக்க: தமிழகத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல்; நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற சாப்பிட வேண்டிய பானங்கள் !

மூக்கடைப்பை சரி செய்யும் எளிய வைத்திய முறைகள்:

  • மழைக்காலத்தில் அடிக்கடி மூக்கடைப்பு வருவதை சரி செய்ய வேண்டும் என்றால், நாம் செய்யும் சின்னஞ்சிறு தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • வெளியில் சென்று வந்தாலே குளிர்ந்த நீரைத் தான் குடிக்க வேண்டும் என்ற பழக்கம் இருக்கும். இவற்றை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதே போன்று குளிர்ச்சியான நீர் மற்றும் ஜுஸ் போன்றவற்றை அதிகமாக குடிக்கும் போது மூக்கடைப்பு தீவிரமாகக்கூடும்.
  • ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் தலைக்குக் குளித்துவிட்டு அதை உலர்த்த மாட்டார்கள். அப்படியே வெளியில் சென்று விடும் போது அதன் ஈரப்பதம் சளி பிரச்சனையை ஏற்படுத்துவதோடு மூக்கடைப்பு பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
  • அதிக தூசியும் சளித் தொல்லை ஏற்பட முக்கிய காரணமாக அமையும் என்பதால் முடிந்தவரை புகை, தூசி உள்ள இடங்களில் செல்வதைத் தவிர்க்கவும். அப்படி செல்லும் நிலை இருந்தால் முக கவசம் அணிந்துக் கொள்வது நல்லது.

  • மூக்கடைப்பு மற்றும் சளி பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது ஆவி பிடிக்க வேண்டும். மருந்தகங்களில் விற்பனையாகும் ஆவி பிடிக்கும் மாத்திரைகள் அல்லது நொச்சி, ஆடாதொடா, வேப்பிலை, குப்பைமேனி போன்ற இலைகளை வேக வைத்து ஆவி பிடிக்கலாம். இதன் மருத்துவ குணங்கள் மூக்கடைப்பு பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.
  • மழைக்காலம் எப்போதுமே உங்களுக்கு ஒத்துக்கொள்ளாது என்று தெரிந்தால் குளிர்ச்சியான பானங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு போன்றவற்றைப் பயன்படுத்தவும். சுக்கு மல்லி காபி, இஞ்சி சாறு பருகுவது உடலுக்கு நல்லது.

மேலும் படிக்க: எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை மறைத்து வைத்திருக்கும் இந்த உணவுகள் இதய நோயிலிருந்து பாதுகாக்க உதவும்


  • இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு தூங்க முடியாமல் இருமல், மூக்கடைப்பு வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி மார்புபகுதி, மூக்கு, நெற்றியில் தடவவும். மிதமான சூட்டில் இருப்பது நல்லது.
  • ஓமவள்ளி எனப்படும் கற்பூரவல்லி, தூதுவளை, வெற்றிலை போன்றவற்றின் சாறு பயன்படுத்தி கசாயம் செய்து பருகுங்கள்.
  • இதுபோன்ற வழிமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே சளி, இருமல் போன்ற பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு Herzindagi வுடன் இணைந்திருங்கள்.

Image Credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com