வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் மலம் கழிக்கச் சிரமப்படுகிறீர்கள், மலம் கழிக்கும்போது வலியை அனுபவிக்கிறீர்கள் அல்லது கடினமான மலம் கழிக்கிறீர்கள் என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மருந்துகள் இருந்தாலும், நீங்கள் வீட்டு வைத்தியத்தையும் முயற்சி செய்யலாம்.
மேலும் படிக்க: முட்கள் செடிக்குள் சிவந்து பழுத்திருக்கும் சப்பாத்திக்கள்ளி பழம், உடல் ஆரோக்கியத்திற்கு வர பிரசாதமாம்
பல உணவுப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. அப்படி வெந்தய விதை அளிக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். வெந்தய விதை பற்றிய ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால், இது எடை இழப்பையும் ஊக்குவிக்கிறது.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற வெந்தய விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. சூப், சப்பாத்தி, கிரேவி, ஜூஸ் மற்றும் குழம்பு வகைகள் ஆகியவற்றில் வெந்தய இலைகளை சேர்க்கலாம்.இது உணவை அதிக சத்தானதாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும் மற்றும் முன்பை விட சற்று குறைவான அசௌகரியத்துடன் மலம் கழிக்க உதவும்.
Image Credit: Freepik
1-2 தேக்கரண்டி வெந்தய விதைகளை இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வரலாம். நீங்கள் தூங்கும் முன் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி வெந்தய விதை தூளை உட்கொள்ளலாம். இது மலச்சிக்கல் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.
பொடுகு, முடி உதிர்தல், முகப்பரு தழும்புகள், நரைத்த முடி மற்றும் முன்கூடியே வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட வெந்தய விதைகள் சாப்பிடுவது உதவும்.
கூந்தல் பிரச்சனையை எதிர்த்துப் போராட வெந்தயப் பொடி மற்றும் கற்றாழை, தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் அப்படியே விடவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவினால் வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
தோல் பிரச்சனைகளுக்கு, ரோஸ்வாட்டருடன் வெந்தய விதைகளைக் கலந்து, கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு மீது தடவ வேண்டும். அது காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவலாம்.
Image Credit: Freepik
மேலும் படிக்க: உடல் ஆரோக்கியம், முடி பிரச்சனைக்குத் தீர்வு காணும் திறமை கொண்ட கறிவேப்பிலை பற்றி பார்ப்போம்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com