herzindagi
image

ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

ஊறவைத்த வெந்தயத்தை நாள்தோறும் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இந்தக் குறிப்பில் காணலாம். சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான பலன்களை இதன் மூலம் பெற முடியும்.
Editorial
Updated:- 2025-11-05, 15:15 IST

நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று வெந்தயம். இது உணவுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. குறிப்பாக, வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்வது பல அதிசயங்களை நிகழ்த்தும். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரை; காலையில் சியா விதை நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

 

செரிமானத்திற்கு உதவும்:

 

ஊறவைத்த வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் இயக்கங்களை சீராக்கி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது அஜீரணம், வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.

 

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

 

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு வரப்பிரசாதம் போன்று அமைகிறது. இரவில் ஊறவைக்கும்போது, வெந்தயத்தில் உள்ள சத்துகள் தண்ணீரில் கலந்து சர்க்கரையின் உறிஞ்சுதலை தாமதப்படுத்துகின்றன. இது இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

uses of fenugreek seeds

 

உடல் எடை குறைப்புக்கு உதவும்:

 

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஊறவைத்த வெந்தயம் ஏற்றதாக அமையும். இது நீண்ட நேரம் பசி உணர்வை தடுத்து, மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பை வேகமாக குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க: குடல் இயக்கத்தை சீராக்கும்; நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்; இந்த மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

 

கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

 

வெந்தயத்தில் புரதமும், நிகோடினிக் அமிலமும் நிறைந்துள்ளன. இவை இரண்டும் கூந்தல் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்க உதவுகின்றன. ஊறவைத்த வெந்தய தண்ணீரைக் குடிப்பது அல்லது ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தடவுவது முடியின் தரத்தை மேம்படுத்தி, பொடுகு தொல்லையை குறைக்கும்.

 

சருமத்தை பொலிவாக்க உதவும்:

 

வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் சரும நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றன. தொடர்ந்து ஊறவைத்த வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறலாம்.

fenugreek seeds benefits

 

ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்:

 

பெண்களுக்கு ஏற்படும் PCOS மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய ஊறவைத்த வெந்தயம் உதவுகிறது. இது மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தசைப்பிடிப்பு மற்றும் அசௌகரியத்தை குறைக்கும்.

 

கொழுப்பை குறைக்கும்:

 

வெந்தயம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவை குறைக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது இருதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். அதன்படி, உங்கள் அன்றாட வாழ்வில் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து கொள்வதன் மூலம், பலவிதமான ஆரோக்கிய பலன்களை பெறலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com