இயற்கையான முறையில் கூந்தல் மற்றும் சருமத்தை பராமரிக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதற்கு நாவல் பழம் ஏற்றதாக இருக்கும். அதன்படி, நாவல் பழத்தில் இருக்கும் சத்துகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வீட்டிலேயே துளசி மற்றும் வேப்பிலை ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்துவது எப்படி?
நாவல் பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, உங்கள் சருமத்திற்கு அற்புதமான நன்மைகளை தருகிறது. இது உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இதில் உள்ள பல அன்டிஆக்சிடென்ட்ஸ் பண்புகள், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் மாற்றுகின்றன. இது உடனடி பொலிவையும், புத்துணர்ச்சியூட்டப்பட்ட தோற்றத்தையும் உங்களுக்கு அளிக்கிறது. ஏதேனும் நிகழ்ச்சிக்கு வெளியே செல்வதற்கு முன் நீங்கள் நாவல் பழத்தின் ஃபேஸ்பேக் பயன்படுத்தினால், உடனடியாக இயற்கையான புத்துணர்ச்சியை பெறலாம்.
நாவல் பழம் உங்கள் இரத்தத்தை நச்சுத்தன்மையிலிருந்து விடுவித்து சுத்திகரிப்பதால், பருக்களுக்கு சிகிச்சையளிக்க இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அதன் பூஞ்சை எதிர்ப்பு (antibacterial) பண்புகள் சருமத்தில் பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகின்றன. நீங்கள் நாவல் பழ விதைகள் மற்றும் பாலை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். இது பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இதோடு மட்டுமல்லாமல், அதிகப்படியான இயற்கை எண்ணெய்யை கட்டுப்படுத்தவும் நாவல் பழம் பயன்படுகிறது. இதனுடன் சிறிது பன்னீர் மற்றும் அரிசி மாவு (rice flour) சேர்ப்பது, உங்கள் எண்ணெய் சருமத்தை மேலும் சமநிலைப்படுத்த உதவும்.
சத்துகள் மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்த நாவல் பழம், தழும்புகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை குறைக்க சிகிச்சை அளிப்பதில் பயன்படுகிறது. இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ், சருமத்தின் மேலடுக்கிலிருந்து இறந்த செல்கள் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன. நிறைய நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், நாவல் பழம் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், உள்ளே இருக்கும் அசுத்தங்களையும் நீக்குகிறது. இதன் விதைகளை வைத்து வீட்டிலேயே ஃபேஸ் பேக் செய்து பார்க்கலாம்.
மேலும் படிக்க: Korean skin care: கண்ணாடி போன்ற பொலிவான சருமத்தை பெற கொரியன் ஸ்கின் கேர்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
நாவல் பழம் உங்கள் சருமத்திற்கு மட்டுமே பயனளிக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இது ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுத்து, சீரான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நாவல் பழத்தின் துவர்ப்பு பண்புகள் ஒட்டுமொத்த இயற்கை எண்ணெய்களை சமநிலைப்படுத்தி, எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையின் நிலையை கட்டுப்படுத்துகின்றன.
விதைகள் நீக்கப்பட்ட நாவல் பழத்துடன் சிறிது நெல்லிக்காய் சாறு மற்றும் பன்னீரை சேர்த்து கலந்து உங்கள் சருமத்தில் பயன்படுத்தலாம். நாவல் பழ விதைகளை மிக்சியில் போட்டு, அதனுடன் பால், எலுமிச்சை, கடலை மாவு, பாதாம் எண்ணெய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து கூந்தலுக்கான ஹேர்பேக் தயாரிக்கலாம்.
இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com