herzindagi
image

உடல் எடை குறைப்பு முதல் சரும ஆரோக்கியம் வரை; இலவங்கப்பட்டையின் அற்புத பயன்கள்

சமையலில் சுவைக்காக பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை, உடல் ஆரோக்கியம் மற்றும் பொலிவான சருமம் போன்ற பல்வேறு நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தும் விதம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-11-02, 16:28 IST

உடல் எடையை பராமரிப்பதும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் பலருக்கு ஒரு சவாலான விஷயமாக உள்ளது. பெரும்பாலான மக்கள் இதற்கு உடனடி தீர்வாக மருந்துகளை நாடிச் செல்கின்றனர். வேறு சிலரோ இதற்கு இயற்கையான வழிகளை தேடுகின்றனர். அந்த வகையில், இலவங்கப்பட்டை எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாகும். இது உடல்நலம் மற்றும் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

மேலும் படிக்க: குடல் இயக்கத்தை சீராக்கும்; நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்; இந்த மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

 

உடல் எடை குறைப்பு:

 

இலவங்கப்பட்டையில் உள்ள சினமால்டிஹைட் (Cinnamaldehyde) மற்றும் பாலிஃபீனால்கள் (Polyphenols) போன்ற கலவைகள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகின்றன. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் விரைவாக கொழுப்பை குறைக்க உதவுகிறது. நிலையான இரத்த குளுக்கோஸ் பசி உணர்வையும் தடுக்கிறது. இதன் மூலம் கலோரி உட்கொள்ளலை குறைக்க உதவுகிறது. தினமும் 1.5 கிராம் இலவங்கப்பட்டையை உட்கொள்வது உடல் எடை குறைப்பிற்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Cinnamon uses

 

சரும ஆரோக்கியம்:

 

இலவங்கப்பட்டை கலந்த நீர் உடலை சுத்திகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கூட்டவும் உதவுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், முகப்பரு மற்றும் தோல் வெடிப்புகளை குறைக்க உதவும். மேலும், செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதன் மூலம் நச்சுகள் சேராமல் பாதுகாத்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க: Uses of cumin water: செரிமானத்தை சீராக்குவதில் இருந்து நச்சுகளை அகற்றுவது வரை; சீரக தண்ணீரின் 6 அற்புத பயன்கள்

 

இலவங்கப்பட்டையை உட்கொள்ளும் முறைகள்:

 

ஒரு பாத்திரத்தில் 1.5 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிறிய இலவங்கப்பட்டை, சில குங்குமப்பூ இழைகள் மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின், வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது தவிர, கால் டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை, 1 டீஸ்பூன் தேனுடன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன், சருமத்தில் நீர்ச்சத்தையும் பராமரிக்க உதவுகிறது.

Cinnamon benefits

 

இலவங்கப்பட்டை பல நன்மைகளை கொண்டிருந்தாலும், அதை அதிகமாக உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே, ஒரு நாளைக்கு 1-1.5 கிராம் வரை எடுத்துக் கொள்வது போதுமானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் அல்லது சிறப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், தங்கள் உணவில் இதை சேர்ப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com