vaginal health issues

vaginal hygiene tips : உங்களின் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

பெண்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ள பின்பற்ற வேண்டிய குறிப்புகளை பற்றி பார்க்கலாம். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-02-19, 10:28 IST

பெண்ணின் பிறப்புறுப்பு அமைப்பானது தனது ph அமிலத்தன்மையை சரியான முறையில் பார்த்து கொள்ளும்.இந்த ph அமிலத்தன்மை சரியான முறையில் இருந்தால் பல்வேறு பிறப்புறுப்பு தொற்றுக்கள் வராமல் பாதுகாக்கலாம். பிறப்புறுப்பை சுத்தம் செய்ய கடைகளில் பல விதமான பொருட்கள் கிடைக்கின்றன.ஆனால் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றவும்.

நல்ல உணவுகளை உண்ணவும்

vaginal hygeine

நாம் நல்ல ஆரோக்யமான உணவுகளை உண்ணும் பட்சத்தில், நம்முடைய உடலை போல, நம்முடைய சினைப்பை மற்றும் பிறப்புறுப்பும் தானாகவே ஆரோக்கியமாக செயல்படும். புரதம், ப்ரோபையாடிக்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின் C, வைட்டமின் E, ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி அமிலம் நிறைந்த உணவு வகைகளை நாம் உணவில் சேர்க்க நம் அந்தரங்க உறுப்பு மிக ஆரோக்கியமாக இருக்கும்.

இதுவும் உதவலாம்:வெள்ளைப்படுதல் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்

பிறப்புறுப்பை சுற்றி உள்ள பகுதியை அடிக்கடி கழுவ வேண்டும்

பெண் பிறப்புறுப்பு தானே சுத்தம் செய்து கொள்ளும் உறுப்பு. வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.. நீங்கள் மென்மையான மற்றும் வாசனை இல்லாத சோப்புகளை பயன்படுத்த வேண்டும். பிறப்புறுப்பில் நாம் பயன்படுத்தும் பொருள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறப்புறுப்பு மிக மிக மென்மையான பகுதி என்பதால் அந்த பகுதியில் நாம் எந்த பொருளை பயன்படுத்தினாலும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படும் மற்றும் அதன் ph அளவு மாறுபடும். இதனால் பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் தொற்று ஏற்படும்

காட்டன் உள்ளாடை அணியலாம்

vaginal infection

காட்டன் உள்ளாடை என்பது லேசான துணி கொண்டு நெய்யப்பட்ட, நன்கு காற்றினை உள்ளிழுக்க கூடிய பொருள். இந்த காட்டன் உள்ளாடைகளில் எந்த விதமான கெட்ட பாக்டீரியா மற்றும் கிருமிகள் உருவாகாது. மேலும் இந்த துணி வேர்வையை இழுத்து விடும். இதனால் உடலில் ஏற்படும் புண், அரிப்பு மற்றும் தொற்று இல்லாமல் போய் விடும்

உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்கவும்

உடலுறவு கொள்வதற்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீரக தொற்றில் இருந்து நாம் தப்பலாம். சிறுநீரக தொற்று நம் சிறுநீரக மண்டலத்தின் எந்த பகுதியையும் பாதிக்கலாம். பெரும்பாலும் சிறுநீர் பையில் தொற்றை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

இதுவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க தண்ணீர் போதுமா?

vaginal health

கொதிக்கும் நீரை கொண்டு கழுவ கூடாது. இது போன்ற பழக்கங்கள் இப்போது புழக்கத்தில் இருந்து வந்தாலும், பிறப்புறுப்பை சுத்தம் செய்ய இவற்றை பயன்படுத்த கூடாது. இவற்றால் நமக்கு பலன் இல்லாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும், இது பிறப்புறுப்பிற்கு பெரிய அபாயத்தை ஏற்படுத்தும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com