-1760356304513.webp)
பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்தை பெற அழகு நிலையங்களுக்கு சென்று பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் பலரிடையே நிலவுகிறது. ஆனால், வீட்டில் இருந்தபடியே சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர்.
அதனடிப்படையில், சில எளிதான விஷயங்களை மேற்கொண்டு நம்முடைய சருமத்தை எவ்வாறு ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என்று இதில் காண்போம். இது இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கு சரியானதாக இருக்கும்.
இந்த வழிமுறைகள் அனைத்தும் இரசாயனங்கள் இல்லாமல் இருப்பதால் நம் சருமத்திற்கு பக்கவிளைவுகள் போன்றவற்றை ஏற்படுத்தாது. இதன் மூலம் இயற்கையான பளபளப்பை நாம் பெற முடியும்.
மஞ்சள், அதன் கிருமி நாசினி பண்புகளுக்காகவும், தயிர் அதன் ஈரப்பதம் மற்றும் மென்மையாக்கும் தன்மைகளுக்காகவும் சரும பராமரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. அரை டீஸ்பூன் மஞ்சளை இரண்டு டேபிள்ஸ்பூன் தயிருடன் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவி விடலாம். மஞ்சள் ஒரு இயற்கையான பொலிவை கொடுக்கும். அதே சமயம் தயிர் சருமத்தை மென்மையாக்கி ஊட்டமளிக்கும்.
மேலும் படிக்க: Chia seed: அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இந்த 5 சியா விதை ஹேர்பேக்குகளை பயன்படுத்தவும்
கற்றாழை, சருமத்தின் சோர்வை போக்கி, குளிர்ச்சி தரும் ஒரு இயற்கையான பொருளாகும். இயற்கையான கற்றாழை ஜெல்லை நேரடியாக சருமத்தில் தடவி பயன்படுத்தலாம். இதன் குளிர்ச்சியான மற்றும் குணப்படுத்தும் பண்புகள், சோர்வடைந்த சருமத்தை உடனடியாக புத்துணர்ச்சியாக்கி, இயற்கையான பளபளப்பை பராமரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க: சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களை தினசரி கடைபிடிக்கவும்
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, இரவில் படுக்கும் முன் முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். இது ஈரப்பதத்தை அளித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் காலையில் உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

வெள்ளரி மற்றும் பன்னீர் கலவை, கோடை நாட்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு குளிர்ச்சி தரும் டோனர் ஆகும். வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக துருவி, அதனுடன் பன்னீரை கலக்க வேண்டும். இந்த குளிர்ச்சியான டோனரை சிறிது காட்டனில் நனைத்து முகத்தில் மெதுவாக தடவவும். இது சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சி கொடுத்து, சரும நிறத்தை பிரகாசமாக்குகிறது.
எவ்வளவு பராமரிப்பு முறைகளை பின்பற்றினாலும், ஆரோக்கியம் இல்லையென்றால் இவை எதுவும் பலன் அளிக்காது. இதற்காக தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான நீரேற்றத்துடன் இருப்பது, உடலின் நச்சுகளை நீக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். சரியான தூக்கம் உங்கள் சரும புத்துணர்வுக்கு மிக அவசியம்.
இந்த எளிய பழக்கவழக்கங்களை உங்கள் தினசரி பராமரிப்பில் சேர்த்து, இயற்கையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com