Drinking Water For Weight Loss in Tamil: உடல் எடையை குறைக்க தண்ணீர் போதுமா?

தண்ணீர் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இதற்கு விலை இல்லை என்றாலும் இதன் மதிப்பு விலை மதிப்பற்றது.water weight loss

water for weight loss tip

தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. எடை மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களின் வளர்ச்சிதை மாற்றம் பின்னடைவை சந்திப்பதால், செரிமானம் கடினமாகலாம். இதனால் உடல் எடையை குறைப்பதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

தண்ணீரை குடித்து உடல் எடையை குறைபதற்கான சில எளிய வழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.

உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கவும்

water

உடலை நீரேற்றமாக வைத்திருப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. இதற்கான அறிவியல் சான்றுகளும் உள்ளன. உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, எடை குறைப்பதில் குறிப்பிடத்தக்க நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாக உணவியல் நிபுணர் திருமதி அனுபமா ஜிரோத்ரா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இது உங்களை நிறைவாக உணர வைக்கும். இதனால் குறைவான கலோரிகளை மட்டுமே சாப்பிட முடியும். உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது, அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்கிறது. அதே சமயம் உங்கள் உடல் கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

water benefits

ஒரு பிரபல நீர் அடிப்படையிலான எடை இழப்பு முறைப்படி நீங்கள் எழுந்தவுடன் உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கண்காணிக்கிறீர்களா?

ஒரு நாளைக்கு சுமார் 1.8 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி, வானிலை மற்றும் உடல் செயல்பாடுகள் போன்ற கரணங்களினால் இந்த அளவுகள் மாறுபடலாம்.

ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் விஷயங்களை செய்யும் போது, நம்மில் பலரும் தண்ணீர் குடிக்கும் அளவுகளை கண்காணிக்க மறந்து விடுகிறோம். யோசித்து பார்த்தால், பல நாட்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்திருப்போம். இந்த பழக்கத்தை மாற்றி அமைப்பதற்கான எளிய வழிகளை இப்போது பார்க்கலாம். இதை பின்பற்றி மாத இறுதிக்குள் சில கிலோவை குறைக்க முயற்சி செய்வோம்!

  • தண்ணீர், பழங்கள் மற்றும் பாதாம் பால் போன்ற பொருட்களை கொண்டு ஸ்மூத்தீஸ் அல்லது குச்சி ஐஸ் போல் செய்து சாப்பிடலாம்.
  • இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை அல்லது மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சூடான நீரை குடிக்கவும்.
  • வளர்சிதை மாற்றம் மற்றும் தாகத்தை அதிகரிக்க சிவப்பு மிளகாயை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
  • தாகத்தை தணிக்க, சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள குளிர் பானங்களுக்கு பதிலாக எப்போதும் தண்ணீரை தேர்வு செய்து குடிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டிய இரத்த பரிசோதனைகள்

தண்ணீரின் மற்ற நன்மைகள்

  • உடல் எடையை குறைப்பதோடு மட்டுமின்றி, தண்ணீர் ஏராளமான மற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது.
  • செல் உற்பத்தியில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உடலில் உள்ள செல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தேவையற்ற நச்சுக்களை சிறுநீர் வாயிலாக வெளியேற்றவும் தண்ணீர் மிகவும் அவசியமாகிறது.
  • உடல் நீரேற்றமாக இருந்தால் சருமம் பிரகாசிக்கும். மேலும் என்றும் இளமையாக புத்துணர்ச்சியுடன் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

இந்த பதிவும் உதவலாம்: கொண்டைக்கடலை போதும் நம் உடல் எடையைக் குறைக்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP