vaginal discharge in women reason

Vaginal Discharge Color in Tamil: வெள்ளைப்படுதல் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்

வெள்ளைப்படுதலின் நிறம், தன்மை மற்றும் மனம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2023-02-15, 10:38 IST

பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் இந்த திரவாமனது முற்றிலும் இயல்பானதே. மாதவிடாயை போலவே வெள்ளைப்படுதலும் ஒரு இயற்கையான செயல்முறை தான், இருப்பினும் இதில் ஏற்படும் சில மாற்றங்கள் நோய் தொற்றுகளின் அறிகுறிகள் ஆகவும் இருக்கலாம். இந்த திரவாமனது தெளிவான வெள்ளை அல்லது லேசான வெள்ளை நிறத்தில் இருக்கும். இது செல்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஆனது. இவை பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்வதால், கருப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பு பகுதியின் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயல்பான மற்றும் அசாதாரண வெளியேற்றம், இவை இரண்டும் வெவ்வேறு பண்புகளை கொண்டுள்ளன. வெளியேற்றத்தின் அளவு, நிறம், மனம் அல்லது தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் பிரச்சனையை குறிக்கின்றன.

இயல்பான வெளியேற்றும் மெல்லியதாகவும், தெளிவாகவும், துர்நாற்றமற்றதாகவும் இருக்கும். இதுபோன்று இயல்பான வெள்ளைப்படுதலால் அரிப்போ அல்லது எரிச்சலோ இருக்காது. மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, ஓவுலேசன் காலகட்டத்தில் இதுபோன்று வெளியேற்றங்கள் ஏற்படலாம். இருப்பினும் கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு வெள்ளைப்படுதல் சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

அசாதாரண வெள்ளைப்படுதலின் அறிகுறிகள் என்ன?

white discharge

  • வெளியேற்றும் கட்டிகளாகவோ அல்லது எரிச்சலுடனோ ஏற்பட்டால் அது தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
  • அடர் மஞ்சள், பிரவுன், சாம்பல் அல்லது பச்சை நிற வெளியேற்றம் தொற்றைக் குறிக்கிறது.
  • வெளியேற்றும் துர்நாற்றம் நிறைந்ததாக இருந்தால் அதை புறக்கணிக்காதீர்கள்.
  • வெளியேற்றத்தின் அளவில் ஏற்படும் திடீர் மாற்றத்திற்கு பின்னால் ஏதேனும் பிரச்சனை காரணமாக இருக்கலாம்.
  • அசாதாரண வெளியேற்றத்தால் வலிமிகுந்த உடலுறவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி, இடுப்பு பகுதியில் வலி, பிறப்புறுப்பில் கொப்புளங்கள் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகளையும் உணரலாம்.

அசாதாரண வெளியேற்றத்திற்கு காரணமான நோய்த் தொற்றுகள்

white discharge

  • பிறப்புறுப்பில் கேண்டிடா எனும் பூஞ்சை வளரும் போது ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது. இது வெளியேற்றத்தை தடிமனாகவும், சீஸ் போலவும் மாற்றுகிறது. இதனால் பிறப்புறுப்பில் வீக்கம் மற்றும் அரிப்பு ஏற்படலாம். இக்காரணத்தினால் உடலுறவு வலி நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற பூஞ்சை தொற்றுகளுக்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • ட்ரைக்கோமோனியாசிஸ் என்பது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று (STI) ஆகும். பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொள்வதால் இந்த நோய் தொற்று ஏற்படலாம். இதனால் வெளியேற்றும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் நிறமாக மாறலாம். மேலும் வெளியேற்றத்தின் அமைப்பும் நுரையாக மாறும். இதுபோன்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க ஆன்டிபயாட்டிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
  • சில சமயங்களில் பாக்டீரியல் வஜினோசிஸ் (BV) உடலுறவின் மூலமாகவும் ஏற்படலாம். இந்த தொற்று உடையவர்களுக்கு துர்நாற்றம் வீசக்கூடிய சாம்பல் அல்லது வெள்ளை நிற வெளியேற்றம் இருக்கும்.
  • கிளமிடியா மற்றும் கோனோரியா போன்ற பாலியல் நோய் தொற்றுகளை(STI) ஆன்டிபயாட்டிக்ஸ் மூலம் சரி செய்யலாம். இதனால் வெள்ளை, பச்சை அல்லது மஞ்சள் நிற வெளியேற்றம் இருக்கலாம். இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நோய் தோற்று பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
  • தொற்றுகள் அல்லாத ஒரு சில காரணங்களினாலும் வெளியேற்றத்தில் மாற்றம் இருக்கலாம். மாதவிடாய் நிறுத்தத்தின் போது அதிகரிக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவுகள், சோப்பு, ஆணுறை போன்ற விஷயங்களும் இதில் அடங்கும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்களை உள்ளிருந்து அழகாக்கும் உணவுகள்

பிறப்புறுப்பு சுகாதாரத்தை பராமரிக்க எளிய குறிப்புகள்

white discharge

  • வாசனை திரவியங்கள், சோப்பு, வைப்ஸ் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பெண்களுக்கான பிற சுகாதாரப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • பிறப்புறுப்பின் உட்புறத்தை கழுவ கூடாது.
  • ஆசனவாயில் மூலம் ஏற்படும் பாக்டீரியா பரவலை தடுக்க, பிறப்புறுப்பின் முன் பகுதியில் இருந்து பின்னோக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
  • நீண்ட நேரம் இறுக்கமான அல்லது வியர்வை நிறைந்த உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.
  • மாதவிடாய் நாட்களில் சானிட்டரி பேடுகளை சரியான இடைவெளியில் மாற்ற வேண்டியது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க தண்ணீர் போதுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com