
குளிர்காலத்தில், உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய கூடுதல் உணவு தேவைப்படுவது இயல்பான ஒன்று. மேலும் குளிர்காலத்தின் போது நம்மில் பலர் உடற்பயிற்சிகளையும் தவிர்த்து விடுகிறோம். நம்மை வீட்டுக்குள் முடக்கி, சூடான, அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தேட வைப்பதில் குளிர்காலத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.
ஆனால், இந்த குளிர்கால சவால்களை எதிர்கொண்டு, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது அல்லது குறைப்பதை நம்மால் சாத்தியப்படுத்த முடியும். உடல் எடையை குறைக்கும் இலக்குடன் இருப்பவர்கள், இந்த ஐந்து எளிய பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், குளிர்காலத்திலும் தங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
ஜாக்கிங், நடைபயிற்சி மேற்கொள்வது போன்றவை குளிர் காரணமாக சாத்தியமில்லாமல் போகும் போது, வீட்டிற்குள்ளேயே நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது ஒரு சிறந்த வழியாகும்.

மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
குளிர்காலத்தில் பசியை விட, சூடாக சாப்பிடுவது தரும் ஆறுதலான உணர்வை நோக்கியே நம் கவனம் அதிகமாக இருக்கும். குளிரின் காரணமாக, ஒரு பெரிய கிண்ணம் நிறைய பாஸ்தா அல்லது இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இதற்கு பதிலாக உங்கள் உணவை கவனமாக திட்டமிடுங்கள்.
குளிர்காலத்தில் நமக்கு அவ்வளவாக தண்ணீர் தாகம் ஏற்படாது. இதன் காரணமாக, நாம் குடிக்கும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட தினசரி நீரின் அளவு, காலநிலையை பொறுத்து மாறுவதில்லை. குளிர் காலமாக இருந்தாலும், உடல் எடையை குறைப்பதற்கு நீரேற்றத்துடன் இருப்பது மிக அவசியம். நீரேற்றமாக இருப்பது கலோரிகளை குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Winter Health Tips: குளிர்காலத்தில் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் 6 உணவுகள் இதோ
இயல்பாகவே, மன அழுத்தம் அதிகரிக்கும் போது, மன ஆறுதல் தேடி அதிக உணவை உண்பது மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வளர்ச்சிதை மாற்றம் மற்றும் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை தூக்கமின்மை கடுமையாக பாதிக்கிறது. எனவே, தினமும் 7 முதல் 9 மணி நேரம் போதுமான தூக்கம் பெறுவது மிகவும் அவசியம்.
எந்த காலநிலை மாற்றமாக இருந்தாலும் உங்களுடைய குறிக்கோளில் தெளிவாக இருத்தல் அவசியம். இதன் மூலம் வேறு விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல், உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தை வெற்றிகரமாக தொடர முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com