
ஒரு வலிமையான மனமும், கூர்மையான நினைவாற்றலும் ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வெற்றிக்கு மிக முக்கியமானவை. ஆகையால், உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும், கவனத்துடனும் வைத்திருக்க உதவும் சில எளிய குறிப்புகளை காணலாம்.
ஒரே நேரத்தில் பல பணிகள் செய்வதை தவிர்க்கவும்:
இன்று நாம் வேகமாக முன்னேறி செல்லும் உலகில் வாழ்கிறோம். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய ஒருவர் எதிர்பார்க்கப்படுகிறார். இருப்பினும், ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வது கவனத்தை சிதறடிக்கிறது மற்றும் ஒருவரின் நினைவாற்றலை பலவீனப்படுத்துகிறது. அதன்படி, கவனத்தை மேம்படுத்தவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ஒரு நேரத்தில் ஒரே பணியில் மட்டும் கவனம் செலுத்தலாம்.

மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்
தூக்கம் உங்கள் மூளைக்கு நினைவுகளை ஒருங்கிணைக்கவும், மன ஆற்றலை மீட்டெடுக்கவும் உதவுகிறது. கவனம், படைப்பாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்த தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: தூக்கமின்மைக்கு தீர்வு: இந்த வைட்டமின் குறைபாட்டை சரிசெய்வது எப்படி?
உடல் செயல்பாடு மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த முடியும். தினசரி 30 நிமிட நடைபயிற்சி கூட உங்கள் மனதை விழிப்புடன் வைத்திருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், உங்கள் மனநிலையை உயர்த்தவும் உதவும். எனவே, தவறாமல் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒமேகா-3, அன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த சில உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். குறிப்பாக, விதைகள், மீன், பெர்ரி பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் மூலம் உங்கள் நினைவாற்றலை சீராக பராமரிக்க முடியும். மேலும், நீண்ட கால மன ஆரோக்கியத்திற்கு இது உதவியாக இருக்கும்.
சிறிய அளவிலான நீர்ச்சத்து குறைபாடு கூட சிந்தனை மற்றும் நினைவாற்றலை பலவீனப்படுத்தும். எனவே, உங்கள் மூளை அதன் சிறந்த நிலையில் செயல்பட, நாள் முழுவதும் போதுமான தண்ணீரை குடிக்க வேண்டும்.
இந்த எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் கூர்மையான மனதையும், ஆரோக்கியமான நினைவாற்றலையும் நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com