herzindagi
Ear pain in kids home remedy

Earache Relief: காது வலிக்கு நிவாரணம் தரும் அருமையான வீட்டு வைத்தியம்

காது வலியுடன் போராடுகிறீர்களா... கிராம்பு எண்ணெய் முதல் துளசி வரை எவ்வாறு தொற்றுநோயிலிருந்து பயனடைவது என்பதைப் பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-07-09, 20:32 IST

காது வலி வந்தால் அவர்களுக்கு சங்கடமான அனுபவமாக இருக்கும். எந்தவொரு பணியிலும் கவனம் செலுத்துவதை வலி கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது. இதனால் தூக்க முறையை கூட பாதிக்கலாம். வலி மந்தமானதாகவோ அல்லது கூர்மையாகவோ இருந்தாலும் பரவாயில்லை ஆனால் இந்த வலி உடலை முழுவதுமாக பாதிக்கிறது. இதற்காக மருத்துவர்களை அணுக முடியாத நிலையில் ஆயுர்வேத நிபுணர்கள் கூறியுள்ள படி வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு காது வாலிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். நிலைமை கடுமையாக இருந்தால், வைத்தியம் வேலை செய்யாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். முதல் நிலை வலியாக இருந்தால் இந்த முறைகள் நிவாரணம் அளிக்கலாம் மற்றும் வலி அல்லது தொற்று மோசமடையாமல் தடுக்கலாம்.

மேலும் படிக்க: தாங்க முடியாத கழுத்து வலிக்கு இதோ சூப்பரான நிவாரணம்

காது வலிக்கான முக்கிய காரணங்கள்

குளிர்காலத்தில் காதுக்கு உள்ளே, நடுவில் அல்லது வெளியே பூஞ்சை குவிவதால் வலி ஏற்படலாம். இருப்பினும் காது வலிக்கான காரணம் பருவங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. இது எந்த நேரத்திலும் நிகழலாம். உதாரணமாக ஒரு சிலருக்கு சளி காரணமாக காதுகளில் வலி ஏற்படுகிறது. இது சைனசிடிஸின் பக்க விளைவுகளாகவும் இருக்கலாம் இதனால் தலைவலி, பல் வலி, கழுத்து வலி மற்றும் தாடை வலி ஆகியவற்றிற்கும் காரணமாக இருக்கலாம். ஜலதோஷத்தின் போது காது வலி என்பது மக்கள் அனுபவிக்கும் பொதுவான வகைகளில் ஒன்றாகும். இருப்பினும் சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் இதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகளைத் தொடர்ந்து வலி கூர்மையானதாக இருந்தால் நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

கர்ண புராணம் (காதுக்கு பூசும் எண்ணெய் )

கர்ண புராணம் என்பது காதில் எண்ணெய் துளிகள் விடுவது அல்லது ஊற்றுவதைக் குறிக்கிறது. பல்வேறு வகையான எண்ணெய்கள் வலியைக் குறைக்கவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் காதை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

கிராம்பு எண்ணெய்

clove oil new inside

கிராம்பு எண்ணெயில் வலி நிவாரணி கூறு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

செய்முறை 

  • கிராம்பு எண்ணெயை ஒரு டீஸ்பூன் எள் விதை எண்ணெயுடன் கொதிக்க வைத்து ஆற விடவும்.
  • எண்ணெயை வடிகட்டி பாதிக்கப்பட்ட காதில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகளை ஊற்றவும். காது வலியிலிருந்து படிப்படியாக நிவரணம் அளிக்கும்.

துளசி சாறு

துளசி அல்லது புனித துளசி என்பது வீட்டில் மிகவும் மதிக்கப்படும் பொருட்களில் ஒன்றாகும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மற்றும் அழற்சி எதிர்ப்பு, இம்யூனோமோடூலேட்டரி மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் தொற்றுநோயைக் குறைக்கவும் வலியைப் போக்கவும் உதவும்.

செய்முறை

  • துளசி செடியிலிருந்து சில இலைகளை எடுத்து கைகளில் நசுக்கி பிழிந்து சாற்றை எடுக்க வேண்டும்.
  • அதன்பிறகு இந்த சாற்றை வடிகட்டிஅதில் இரண்டு துளிகள் உங்கள் காதில் ஊற்றவும்.

தேயிலை எண்ணெய்

ஆயுர்வேதத்தின் படி தேயிலை மர எண்ணெயில் கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் வீட்டிலேயே காது வலிக்கு நீங்கள் முயற்சி செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

செய்முறை

  • ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் போன்ற ஒரு டீஸ்பூன் அடிப்படை எண்ணெயுடன் இரண்டு துளிகள் தேயிலை மர எண்ணெயை கலக்கவும்.
  • எண்ணெய்களை நன்றாகக் கலந்து இரண்டு சொட்டு கலவையை பாதிக்கப்பட்ட காதில் ஊற்றினால் வலி தணியும்.

ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எண்ணெய்

clove oil inside

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) காதில் லேசானது முதல் மிதமான வலிக்கு சிகிச்சையளிக்க ஆலிவ் எண்ணெயை ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக பரிந்துரைக்கிறது.

செய்முறை

  • ஒரு டீஸ்பூன் ஆலிவ் அல்லது நல்லெண்ணெயை சூடாக்கவும்.
  • அதை குளிர்விக்க சிறிது நேரம் அனுமதிக்கவும். அதன்பிறகு பாதிக்கப்பட்ட காதில் 1-2 சொட்டுகளை ஊற்றவும்.
  • காதுகளில் ஊற்றுவதற்கு முன் எண்ணெயின் வெப்பநிலையை சரிபார்க்கவும்.
  • காதுக்கு வெளியே வீக்கத்தைக் குறைக்க உதவும்.

பூண்டு

பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் வலி மற்றும் நெரிசலைக் குறைக்க உதவுகிறது

செய்முறை

  • 2-3 பூண்டு பற்களை மசித்து எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சில நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • பேஸ்ட்டை ஒரு துணியில் வைத்து அதைக் கொண்டு காதில் வீக்கமடைந்த பகுதிகளில் மசாஜ் செய்யவும்.

மேலும் படிக்க: இந்த எளிய வழிகளை கடைப்பிடித்தால் காதுகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கலாம்

இஞ்சி

இஞ்சியில் வலியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது.

செய்முறை

  • புதிய இஞ்சி துண்டுகளில் இருந்து சாறு எடுக்கவும்.
  • வலியிலிருந்து நிவாரணம் பெற திரவத்தை வடிகட்டி, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள தோலில் பயன்படுத்தவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com