இருமல் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான உடல்நல பிரச்சனை ஆகும். சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிய மற்றும் பயனுள்ள நிவாரணத்தை பெறலாம். தேன், மஞ்சள் பால், துளசி, ஆவி பிடித்தல் போன்ற பாரம்பரிய வீட்டு வைத்தியங்கள் எவ்வாறு இருமலை குணப்படுத்துகின்றன என்று இதில் பார்ப்போம்.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
தேனையும், இஞ்சி சாறையும் கலந்து அருந்துவது இருமலை இயற்கையாக குறைக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன் சில துளிகள் இஞ்சி சாறை கலந்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம். தொண்டை பகுதியில் உள்ள வறட்சியை போக்க தேன் உதவுகிறது. இது தவிர தொண்டையில் ஏற்படும் எரிச்சலை குறைக்க இஞ்சி பயன்படுகிறது.
தூங்குவதற்கு முன் மஞ்சளை கலந்த சூடான பாலை அருந்துவது இருமல் மற்றும் தொண்டை எரிச்சலுக்கான ஒரு வீட்டு வைத்தியம். மஞ்சளின் இயற்கையான அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு (Antibacterial) பண்புகள் தொண்டைக்கு இதமளித்து, வீக்கத்தை குறைத்து, தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றன. மேலும், தூக்கத்திற்கும் இது உதவுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசியம் பின்பற்ற வேண்டிய 5 குறிப்புகள்
துளசி, சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் ஒரு மூலிகையாகும். ஒரு சில துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அந்தக் கஷாயத்தை அருந்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சளியை தளர்த்துவதன் மூலம் நெஞ்சில் ஏற்படும் அடைப்பை குறைக்க துளசி உதவுகிறது. இது சுவாச பாதையை சீராக்கி, சுவாசிப்பதை மிகவும் எளிதாக்குகிறது.
இருமல், சளியால் நெஞ்சு மற்றும் மூக்கு அடைப்பு ஏற்படும் போது சூடான நீராவியை சுவாசிப்பது உடனடி நிவாரணம் அளிக்கும். இது அடைக்கப்பட்ட நாசி பாதையை தெளிவுபடுத்துகிறது. மேலும், சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து, சுவாசிப்பதை மிகவும் வசதியாக்குகிறது.
சளி, இருமல் பிரச்சனைக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் மருந்துகளாக மிளகு, வெல்லம் கருதப்படுகிறது. ஒரு சிறிய துண்டு வெல்லத்துடன், ஒரு சிட்டிகை மிளகு பொடியை சேர்த்து சாப்பிடலாம். வெல்லம் மற்றும் மிளகு கலவையானது தொண்டையை சூடேற்றி, சளி அடைப்பை குறைப்பதன் மூலம் இருமலை இயற்கையாகவே குணப்படுத்த உதவுகிறது.
இவை மட்டுமின்றி வெந்நீர், மூலிகை தேநீர் மற்றும் சூப் போன்ற சூடான திரவங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது கூடுதல் நன்மை கிடைக்கும். இவை, தொண்டைக்கு ஈரப்பதத்தை அளித்து, இருமலால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கின்றன.
இந்த எளிய மற்றும் ஆற்றல் மிகுந்த வீட்டு வைத்தியங்கள், இருமல் மற்றும் அசௌகரியத்தை திறம்பட போக்க உதவும். எனினும், இந்தப் பிரச்சனை அதிகரிப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com