herzindagi
Ear exercises to improve hearing

Ears Health: இந்த எளிய வழிகளை கடைப்பிடித்தால் காதுகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கலாம்

காது என்பது நம் உடலின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உறுப்புகளில் ஒன்றாகும். ஆனால் அதற்கு சமமான கவனிப்பும் கவனமும் தேவை இல்லையெனில் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
Editorial
Updated:- 2024-07-05, 13:17 IST

நாம் அடிக்கடி நமது காதுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து இயர்போன்களைப் பயன்படுத்தி கொண்டே இருக்கிறோம். காதுக்கு ஓய்வு என்பதை தருவதேயில்லை. அனைத்து உடல் உறுப்புகளைப் போலவே காதுக்கும் கவனிப்பும் தேவை. இல்லையெனில் இது காது தொற்று மற்றும் பிற நோய்களுக்கு வழிவகுக்கும். கிரேட்டர் நொய்டாவின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஆலோசகர் (ENT, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை) டாக்டர் ஷிகாராணி படேலிடம் இதைப் பற்றிய நுண்ணறிவுக்காகப் பேசி தெரிந்துக்கொண்ட விஷயங்களை பார்க்கலாம். காது சுகாதாரத்தை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: இரவு 7 மணிக்கு முன் இரவு உணவு எடுத்துக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

காதில் இயர்போன் வைக்காதீர்கள்

earing headset inside

நாம் அடிக்கடி காதுகளில் இயர்போன்களை காதுக்குள் செருகிக் வைத்துக்கொள்கிறோம். காதுகளின் புறணி மிகவும் மென்மையானது மற்றும் அடிக்கடி  இயர்போன் வைப்பதால் காது எளிதில் சேதப்படுத்த தொடங்குகிறது. மேலும் மற்றவர்களின் இயர்போன்களைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது காது தொற்றுக்கு வழிவகுக்கும்.

சரியான முறையில் காதை சுத்தம் செய்யுங்கள்

நாம் அடிக்கடி காதுகளை தவறான முறையில் சுத்தம் செய்கிறோம். காட்டன் இயர்பட்கள் தான் காதுகளை சுத்தம் செய்ய நாம் அதிகம் பயன்படுத்தும் பொருள். ஆனால் சுத்தம் செய்வதற்குப் பதிலாக இயர்பட்கள் காது மெழுகலை மீண்டும் உள்ளே தள்ளும். அதன்பின் அதை அகற்றுவது கடினமாகிவிடுகிறது. காதுகளை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழி ஈரமான மெல்லிய துணியைப் பயன்படுத்துவதாகும். இந்த செயல்முறையை தினமும் செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் உங்கள் காதுகளில் காது மெழுகு அழுக்குகள் படிந்திருந்தால் அதை அகற்ற மருத்துவ உதவியை நாடுங்கள்.

உரத்த இசைகளை காதுகளை ஒருபோதும் வைக்காதீர்கள்

ear sounds inside

மனித காதுகள் கேட்கும் வரம்பைக் கொண்டுள்ளன, மேலும் அதைக் கடப்பது செவிப்பறைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நம்மில் பெரும்பாலோர் சத்தமான இசைக்கு காதுகளில் கேட்க ஆசைப்படுகிறோம். இதனால் கேட்கும் திறன் குறைதல், காது செல் சேதம் மற்றும் காது நரம்பு சேதம் போன்ற கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே குறைந்த ஒலியில் இசையைக் கேட்க அறிவுறுத்தப்படுகிறது.

காது பிரச்சினைகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்

மேலும் படிக்க: மூட்டு வலியை அடியோடு விரட்டும் பூண்டு எண்ணெய்

முன்பு கூறியது போல் நம் காதுகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறோம், இதனால் காது பிரச்சினைகளை புறக்கணிக்கிறோம். இதை ஒருபோதும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. காதுகேட்பதில் ஏதேனும் சிரமம், காதில் வலி அல்லது காது மெழுகு, அரிப்பு அல்லது காயங்கள் போன்ற காது தொடர்பான வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக சிகிச்சைக்காக ENT நிபுணர்களை அணுகவும்.

உங்கள் காது ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருக்க, இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com