தொடைப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டால் சொல்ல முடியாத அளவிற்கு வலியும், வேதனையும் இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்க முடியாத அளவிற்கு அரிப்பு ஏற்படுவதோடு தொடை இடுக்குப் பகுதிகளில் அகலமாகப் படை தோன்ற பாதிப்பும் ஏற்படும். ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவு பாதிப்பை சந்திக்கிறார்கள். பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படக்கூடிய இந்த பாதிப்பை வீடுகளிலேயே சரி செய்ய முடியும். இதோ அதற்கான எளிய வீட்டு வைத்திய முறைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
தொடை அரிப்பைத் தடுக்கும் வைத்திய முறைகள்:
- கற்றாழை ஜெல்: கற்றாழையில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளதால் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் தடவலாம். இது அரிப்பைக் கட்டுப்படுத்துவதோடு வலியையும் படிப்படிப்பாக குறைக்கும்.
- தேங்காய் எண்ணெய்: தொடை இடுக்குப் பகுதிகளில் ஏற்படக்கூடிய அரிப்பைக் குணப்படுத்த தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கலாம். இதில் உள்ள ஆன்டிசெப்டிக் மற்றும் ஈரப்பத மூட்டும் பண்புள் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குணப்படுத்தவும். தேங்காய் எண்ணெய்யும் மஞ்சள் கலந்தும் உபயோகிக்கலாம்.
- பேக்கிங் சோடா: அரிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ள இடங்களில் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பாதிப்பு இடங்களில் தடவ வேண்டும். இதில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் அரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.
- சருமத்தில் நீரேற்றம் இருந்தால் மட்டுமே அரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது. எனவே அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- தொடையில் வைத்த கைகளை எடுக்க முடியாத அளவிற்கு அரித்துக் கொண்டே இருந்தால் சுடு தண்ணீர் மஞ்சள் ஊற்றி நன்கு அப்பகுதிகளைக் கழுவ வேண்டும். இதையடுத்து 10 முதல் 15 நிமிடங்களாவது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தனம் வைக்கவும்.
- தொடைப்பகுதிகளில் ஏற்படக்கூடிய அதிக வியர்வையும் அரிப்பை நமக்கு ஏற்படுத்தலாம் என்பதால் காற்றோட்டத்தை ஏற்படுத்தும் காட்டன் ஆடைகளை அணிய வேண்டும்.
- சுடு தண்ணீரில் உப்பு கலந்து அரிப்பு ஏற்பட்ட இடங்களை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் பவுடர் அல்லது மருத்துவரின் அறிவுரையின் பேரில் அரிப்பு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

பாதிப்பைத் தடுக்கும் முறை:
- குளிர்காலங்களை விட பெண்களுக்கு வெயில் காலத்தில் அதிகளவு தொடை இடுக்கு அரிப்பு பாதிப்பு ஏற்படும். எனவே முடிந்தவரை லெக்கின்ஸ், இறுக்கமான ஆடைகள் அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தவரை காற்றோடமாக உள்ள காட்டன் ஆடைகளை அணியவும்.
- பொது கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு எளிதில் பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரை தவிர்க்கவும். ஒருவேளை தவிர்க்க முடியாத பட்சத்தில் பிறப்புப் பகுதிகள் மற்றும் தொடைப்பகுதிகளை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation