herzindagi
image

Benefits of cinnamon: இலவங்கப்பட்டையின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

இலவங்கப்பட்டையின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை இதில் ஏராளமான பயன்கள் உள்ளன.
Editorial
Updated:- 2025-11-26, 20:38 IST

நம்முடைய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு எளிய பொருளாக இலவங்கப்பட்டை தோன்றலாம். ஆனால், பல வகையான ஆரோக்கிய நன்மைகள் இதன் மூலம் நமக்கு கிடைக்கிறது. அதன்படி, நமது உணவில் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு:

 

இலவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிஹைட் (cinnamaldehyde) மற்றும் பாலிபினால்கள் (polyphenols) போன்ற சேர்மங்கள், இன்சுலின் உணர்திறனை (insulin sensitivity) மேம்படுத்தும். இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே குறைக்க விரும்புவோர், இலவங்கப்பட்டையை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

இருதய ஆரோக்கியம்:

 

கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கவும், இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்தவும் இலவங்கப்பட்டை உதவுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து ஒட்டுமொத்த இருதய செயல்பாட்டை சீராக்குவதுடன், இருதயம் தொடர்பான அபாயத்தை குறைக்கின்றன.

Benefits of cinnamon

 

மேலும் படிக்க: மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் 8 எளிய குறிப்புகள்

 

அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்தது:

 

இலவங்கப்பட்டையில் ஆற்றல் மிகுந்த அன்டிஆக்சிடென்ட்ஸ் (Antioxidants) நிறைந்துள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. மேலும், வயது அதிகரிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளையும் இது கட்டுப்படுத்துகிறது.

 

வீக்கத்தை குறைக்கும் ஆற்றல்:

 

இதில் உள்ள வீக்கத்தை குறைக்கும் சேர்மங்கள் (anti-inflammatory compounds), உடலில் உள்ள உள் வீக்கத்தை தணிக்க உதவும். இதனால், நாள்பட்ட மூட்டு வீக்கம் தொடர்பான கீல்வாதம் (arthritis) போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.

மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்

 

செரிமானத்தை சீராக்கும்:

 

இலவங்கப்பட்டையில் உள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் (bioactive compounds) செரிமான அமைப்பை தூண்டுகின்றன. இது வயிறை இதமாக்குவதுடன், வீக்கம், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணம் ஆகியவற்றை குறைத்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Uses of cinnamon

 

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல்:

 

இலவங்கப்பட்டை, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு (antibacterial and antifungal) பண்புகளை கொண்டிருப்பதால், இது நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

 

சுவாச புத்துணர்ச்சியை அதிகரிக்கும்:

 

இலவங்கப்பட்டை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுவதால், மவுத்வாஷ்களில் (mouthwashes) இலவங்கப்பட்டை ஒரு மூலப்பொருளாக உள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com