குளிர்காலம் வந்தாச்சு. மறக்காமல் கர்ப்பிணிகள் இந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய பருவ கால தொற்றுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதிலும் கர்ப்பிணி பெண்கள் மற்ற நாட்களை விட இந்த காலத்தில் அதீத அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.  
image
image

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மிகுந்த சவாலான காலக்கட்டம். மற்ற நாட்களைப் போன்று இயல்பாக எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. அதுவும் தற்போது நிலவக்கூடிய இந்த குளிர்காலத்தில் அதிக கவனத்துடன் உடல் நலத்தில் அக்கறையுடன் கர்ப்பிணிகள் செயல்பட வேண்டும். இல்லையென்றால் சளி, இருமல் பிரச்சனைகளோடு வேறு சில உடல் உபாதைகளையும் அனுபவிக்க நேரிடும். இன்றைக்கு குளிர்காலத்தில் எப்படியெல்லாம் கர்ப்பிணி பெண்கள் தங்களது உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாத் தெரிந்துக் கொள்ளலாம்.

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்:

அதிக தண்ணீர் குடித்தல்:

பொதுவாகவே குளிர்காலம் தொடங்கிவிட்டாலே தாகம் எடுக்காது. இதனால் அடிக்கடி தண்ணீர் உட்கொள்ளலைக் குறைக்க ஆரம்பித்துவிடுவோம். மகப்பேறு மருத்துவர்களின் கூற்றுப்படி, எந்த பருவ காலங்களாக இருந்தாலும் கட்டாயம் தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பார்கள். ஆனால் குளிர்காலத்தில் இதை முறையாக நாம் பின்பற்றுவதில்லை. இது முற்றிலும் தவறு. அதிக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நமது உடல் ஆரோக்கியம் கெட்டுவிடக்கூடும். குறிப்பாக குளிர்ந்த காற்றினால் உடல் வறட்சி ஏற்படுவதோடு நீரழிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே முடிந்தவரை அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க:குளிர்காலத்தில் ஜில் தண்ணீரில் குளித்தால் என்ன ஆகும்? இந்த நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல்:

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவரை சீசனில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். திராட்டை, ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடுவதால் சிலருக்கு சளித்தொல்லை ஏற்படும். எனவே அந்த பழங்களைத் தவிர்ப்பது நல்லது. குளிர்காலத்தில் சூடான உணவுகளை அதிகம் சாப்பிட தோன்றும். சாப்பாடு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து ஊட்டச்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். இதோடு பட்டாணி, பச்சைப்பயறு, சுண்டல் போன்ற புரோட்டீன் நிறைந்த பயறு வகைகளையும் சாப்பிட வேண்டும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பை சீராக்கும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. மஞ்சள் கரு சாப்பிட பிடிக்கவில்லையென்றால் வெள்ளைக்கருவாவது சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடுதல்:

குளிர்காலத்தில் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சட்டென்று குறைந்துவிடக்கூடும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உடனடியாக அவர்களைத் தாக்க நேரிடும். இந்நேரத்தில் எந்த மருந்து, மாத்திரைகளையும் உட்கொள்ள முடியாத நிலை இருக்கும். எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவாக வைத்திருக்க கட்டாயம் காய்ச்சல் தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். ஒருவேளை இதுக்குறித்த விழிப்புணர்வு எதுவும் இல்லையென்றால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனைப் பெற்று அதன் படி செயல்பட வேண்டும்.

உடற்பயிற்சி:

குளிர்காலத்தில் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதே பலருக்கு சவாலான விஷயமாக அமையும். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றாலும் முடியாத காரியம். இந்த நேரத்தில் உடலை ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க வீட்டிற்குள்ளேயே முடிந்தவரை சில உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். அதுவும் உங்களின் உடல் நலத்திற்கு எது ஏற்றது? என்பதை மருத்துவ ஆலோசனையின் படி மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:அபார்ஷன் டேப்லெட் பெண்களை எவ்வளவு பாதிக்கிறது? பாதிப்புகளை சமநிலைப்படுத்த 3 வழிகள்

சரும பராமரிப்பில் கவனம்:

வெயில் காலங்களை விட குளிர்காலத்தில் சருமம் சட்டென்று வறண்டு போய்விடும். கர்ப்ப காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு சரும பராமரிப்பிலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும். குளிர்காலத்தில் முடிந்தவரை வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதையும், அதிக சூடான தண்ணீரில் குளிப்பதையும் தவிர்த்துவிட வேண்டும். அதீத குளிரை அனுபவிக்க நேர்ந்தால் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும்.

மேலும் படிக்க:குளிர்காலத்தில் தொண்டை சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க வழிகள்

கால்களுக்கு மசாஜ்:

கர்ப்ப காலத்தில் பொதுவாக கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏற்படும். அதுவும் குளிர்காலத்தில் நிலவும் சில்லென்ற பருவநிலை கால் வலியை அதிகப்படுத்தும். இவற்றைத் தவிர்க்க வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கால்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

selfcare

மகிழ்ச்சியுடன் இருத்தல்:

கர்ப்பிணிகள் எந்தளவிற்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களோ? அந்தளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கம். குறிப்பாக 9 மாத காலத்திற்குள் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு இருதய பரிசோதனை மேற்கொள்வார்கள். இவற்றில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் குழந்தை பிறப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்.

Image credit - freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP