herzindagi
home remedies for indigestion problem

இஞ்சி,எலுமிச்சை, திப்பிலி இருந்தால் போதும் அஜீரண கோளாறு இருக்கவே இருக்காது!

<span style="text-align: justify;">மேல் வயிறு அல்லது வயிற்றில் ஏற்படும் சிறிய அசௌகரியத்தை அஜீரணக் கோளாறு என்பார்கள்.&nbsp;</span>
Updated:- 2024-07-31, 19:00 IST

இருந்தாலும், செரிமானம் சீராக இல்லாமல் இருந்தாலும் வயிற்றில் அசௌரியமான சூழலை அனுபவிக்க நேரிடும். குறிப்பாக மேல் வயிறு அல்லது வயிற்றில் ஏற்படும் சிறிய அசௌகரியத்தை அஜீரணக் கோளாறு என்பார்கள். மருத்துவத் துறையில் டிஸ்பெப்சியா என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பால் இரைப்பைப் புற்றுநோய், இரைப்பை அழற்சி, குடற்புண், பித்தப்பைக் கல், கணைய அழற்சி போன்ற பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

எனவே சாப்பிடவுடன் குமட்டல், வாய் துர்நாற்றம், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வயிறு உப்பிசம் போன்ற அறிகுறிதல் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைககுச் செல்வது நல்லது. ஒருவேளை உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை இருந்தால், வீட்டிலேயே அஜீரணத்தைக் குணப்படுத்துவதற்கு சில வீட்டு வைத்திய முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில உங்களுக்காக.

indigestion

மேலும் படிக்க: வெறும் வயிற்றில் டீ குடித்தால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

அஜீரணத்தைக் குணமாக்கும் எளிய வைத்திய முறைகள்:

திப்பிலி பொடி: 

வயிற்றில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் நெஞ்செரிச்சல் இருந்தால் உடனடியாக திப்பிலி பொடியை சாப்பிடவும். சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம் போன்றவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை தினமும் சிறிதளவு சாப்பிடும் போது கொஞ்சம் கொஞ்சமாக அஜீரணக் கோளாறு பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

இஞ்சி:

வயிற்று வலி, வயிற்று உப்பிசம் போன்ற பாதிப்புகள் இருந்தால் கட்டாயம் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை தட்டிப்போட்டு சாறாக அல்லது டீ செய்து சாப்பிடலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் அஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்தும். 

எலுமிச்சை:

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் சாப்பிடவுடன் ஏற்படும் ஏப்பம், வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகளைக் குறைக்க எலுமிச்சையை சோடாவுடன் கலந்துக் குடிக்கலாம். அல்லது எலுமிச்சையை சாறுடன் வெறும் உப்பு கலந்து குடிக்கலாம். இது வயிற்று வலியையும் அஜீரணத்தையும் குறைக்க முடியும்.

பெருஞ்சீரகம்:

வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் தொடர் ஏப்பம் அதிகமாக இருந்தால், பெருஞ்சீரகத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது பெருஞ்சீரகத்தைத் தண்ணீரில் ஊற வைத்து தினமும் காலையில் பருகலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அஜீரணக் கோளாறுகளைக் குறைக்க உதவியாக இருக்கும்.

புதினா:

வாய் துர்நாற்றமும் அஜீரண கோளாறுகளின் அறிகுறிகளாக உள்ள நிலையில், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் புதினா இலைகளில் சட்னி அல்லது தேநீர் செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க: இரத்தத்தில் நச்சுத்தன்மையை நீக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்

home remedie

இதே போன்று அஜீரண கோளாறுகளைச் சரி செய்ய வேண்டும் என்றால், தேன், நெல்லிக்காய் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com