உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் ஏப்பம் வருவது இயற்கையான ஒரு விஷயம். ஆனால் சில நேரங்களில் இந்த ஏப்பம் அழுகிய முட்டை போன்ற துர்நாற்றத்துடன் வரும். இதை "புளித்த ஏப்பம்" என்று கூறுவார்கள். இது உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம், வயிற்றில் இருந்து வெளியேறும் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்கள். இவை பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்களுடன் கலந்து துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இதற்கு பிற காரணங்களும் உள்ளன. இந்த புளித்த ஏப்பம் நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அந்த வரிசையில் புளித்த ஏப்பம் வராமல் இருக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உணவு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுங்கள். இது செரிமானத்தை தூண்டி எந்தவித பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.
ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கவும். இது நெஞ்செரிச்சலை தடுக்கும்.
ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சூடான நீரில் கலந்து குடிக்கவும். இது அமிலத்தன்மையை குறைக்கும்.
உணவுக்குப் பிறகு புளித்த ஏப்பம் வந்தால், சீரக தண்ணீர் குடிக்கவும். ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். இது செரிமானத்தை மேம்படுத்தி வாயு மற்றும் புளித்த ஏப்பத்தை குறைக்கும்.
புளித்த ஏப்பம் வரும்போது இஞ்சியை மென்று சாப்பிடுங்கள் அல்லது இஞ்சி சாறு குடிக்கவும். இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் செரிமானத்திற்கு உதவும்.
மேலும் படிக்க: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க; ஒரு வாரம் தொடர்ந்து இந்த ஜூஸை குடித்து பாருங்க
பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சிறிதளவு எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பயன்படுத்தினால் வயிற்று அமிலம் சமநிலைப்படும்.
மருத்துவரின் பரிந்துரையின்படி, புளித்த ஏப்பம் மற்றும் நெஞ்செரிச்சலை குறைக்க ஆன்டாசிட் சிரப்களை பயன்படுத்தலாம்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com