herzindagi
garlic peel big Image

Garlic Peel Benefits: இதய நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல ஆரோக்கிய பலன்களை தரும் பூண்டு தோல்

பூண்டை சமையலில் பயன்படுத்திய பிறகு தோலை தூக்கி எறிய வேண்டும். எனில் இந்தக் கட்டுரையில் பூண்டு தோலில் இறுக்கு  நன்மைகள் பற்றி பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-05-11, 13:20 IST

பூண்டு தோல் இந்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பூண்டை அதன் தோலுடன் பயன்படுத்துவதால் உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த கட்டுரையில் பூண்டு தோலின் பல நன்மைகள் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். டெல்லியில் உள்ள Cloudnine Group of Hospitals இன் ஊட்டச்சத்து நிபுணர் கரிமா சவுத்ரியிடம் இருந்து பூண்டு தோலின் நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். 

மேலும் படிக்க: ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி அதிம் நிறைந்த பழங்கள், காய்கறிகள் பற்றி தெரியுமா?

பூண்டு தோல்கள் இதயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்

garlic heart inside

பூண்டு தோலைத் தொடர்ந்து சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், அல்லியின் மற்றும் சல்பர் ஆகியவை இதய பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பூண்டு பற்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஏனெனில் இது கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாக உள்ளதால் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

பூண்டு தோல் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக் ஆகும்

garlic inside  ()

பூண்டு தோலில் உள்ள அல்லின் மற்றும் கந்தகத்தின் காரணமாக இது இயற்கையான ஆண்டிபயாடிக் என்று கருதப்படுகிறது. இது பல்வேறு வகையான தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும்.

பூண்டு தோல் செரிமானத்தை ஊக்குவிக்கிறது

பூண்டு தோல் செரிமானத்தை மேம்படுத்தவும், அஜீரணத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். அஜீரணம், வாயு, வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க: தினமும் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை சாப்பிடுங்கள்.. உங்கள் உடலில் நடக்கும் அற்புத மாற்றத்தை பார்ப்பீர்கள்

பூண்டு தோல் உணவை சுவையாக மாற்றும். இது உணவை சுவையாக மாற்றுவது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலருக்கு செரிமானத்தை பாதிக்கும் பொருட்கள் இருக்கலாம் என்பதால் அது போன்ற நபர்கள் அதிகபட்ச அளவில் உட்கொள்ள வேண்டும். நீங்கள் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ நிலையால் அவதிப்பட்டால் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com