குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகளிடம் பொதுவாக பாதிக்க கூடிய விஷயம் இரத்த சோகை. நமக்கு இரத்த சோகை பாதிப்பு உள்ளதா என எளிதாக கண்டுபிடித்துவிடலாம். காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சென்றால் அவர் கண்களுக்கு கீழ் பார்ப்பது போல இரத்ததின் அறிகுறியே இல்லை என்றால் நமக்கு இரத்த சோகை பாதிப்பு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இரத்த சோகை எதனால் ஏற்படுகிறது ? இரத்த சோகை பாதிப்புக்கு உட்கொள்ள வேண்டிய இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகள் எவை ? முழு விவரங்களும் இந்த கட்டுரையில்...
மருத்துவத்தின்படி ஆண்களுக்கு உடலில் 13 கிராம் விழுக்காடு குறைவாக ஹீமோகுளோபினும் பெண்களுக்கு 12 கிராம் விழுக்காடு குறைவாக ஹீமோகுளோபின் இருந்தால் இதை இரத்த சோகை பாதிப்பாகும். இரத்த சோகை வருவதற்கு முக்கியமான காரணங்களில் இரும்புச்சத்து குறைபாடும் ஒன்று. ஆனால் இது மட்டுமே முழு காரணம் கிடையாது. உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாக தோன்றினால் கட்டாயம் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது அவசியம். ஏனென்றால் அப்போது தான் எந்தமாதிரியான இரத்த சோகை பாதிப்பு என கண்டறிய முடியும்.
இரத்த சோகையை மூன்று வகையாக பிரிக்கலாம். உடலில் இதர பாதிப்புகள் காரணமாக இரத்தம் வெளியேறுவதால் இரத்த சோகை ஏற்படலாம். உதாரணமாக மாதவிடாயில் இருக்கும் பெண்களுக்கு இரத்த போக்கு ஏற்படுவதால் இரத்த சோகை பிரச்சினை இருக்கலாம்.
அடுத்ததாக வைட்டமின் பி 12, ஃபோலிம் அமிலம் குறைபாடு ஆகியவை இரத்த சோகைக்கு வழிவகுக்கும். எலும்பு மஜ்ஜை சரியாக செயல்படாவிட்டால் இரத்த சோகை வரும். உடலில் இரத்த உற்பத்தி சீராக இருந்து மரபணு காரணங்களால் இரத்த செல்கள் அழிந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும். எனவே முறையான பரிசோதனை செய்து இரத்த சோகை பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறியவும்.
மேலும் படிங்க சின்னம்மை பாதிப்பில் இருந்து தற்காப்பது எப்படி ? ஆரோக்கியமான உணவுமுறை என்ன ?
வழக்கம் போல இரும்புச்சத்து குறைபாட்டை தவிர்க்க பேரீச்சை பழம் சாப்பிடுவது மட்டும் பலன் தராது. சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 15 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவை.
இதற்கு நீங்கள் இரண்டு கிலோ பேரீச்சை சாப்பிட வேண்டும். இது சாத்தியம் அல்லாத விஷயம். பசலைக்கீரை ஒரு கட்டு அல்லது முளை கட்டிய பயறு 400 கிராம் அல்லது காளான், பூசணி விதைகள் சாப்பிடுவது இரும்புச்சத்து தேவையை பூர்த்தி செய்யும்.
அதேபோல உடலில் இரும்புச்சத்து தங்குவதற்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிடலாம். இதை சாப்பிட்ட பிறகு டீ, காப்பி குடிப்பதை தவிர்க்கவும். டீ மற்றும் காப்பி உடலின் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மையைக் குறைக்கும்.
மேலும் படிங்க சமூக விலகலை ஏற்படுத்தும் சமூக வலைதளங்கள்! மன நலன் காக்க விலகி இருப்பது எப்படி ?
தாவரங்களில் உள்ள இரும்புச்சத்து நமது உடல் குறைவாகவே உறிஞ்சும். ஆனால் சிவப்பு இறைச்சியில் உள்ள இரும்புச்சத்து உடல் அதிகமாக உறிஞ்சும். வைட்டமின் பி 12 குறைப்பாட்டை தவிர்க்க ஈரல் சாப்பிடலாம், பால் குடிக்கலாம். பி 12 குறைபாடு மூளை வளர்ச்சியையும் பாதிக்கும். இரும்புச்சத்து குறைப்பாட்டல் வரும் இரத்த சோகைக்கு உடலில் இரத்தம் ஏற்ற தேவையில்லை. இதர இரத்த சோகைக்கு இரத்தம் ஏற்றும் நிலை வரலாம். இரத்த சோகை பிரச்சினையினால் அதிக பாதிப்பை ஏற்படுவதை தவிர்க்க குழந்தைகளுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி ஊசி போடலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com