இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்றியமையாதது. தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை வைத்தே அதன் சாதக பாதகங்கள் நமக்கு புரியும். ஆனால் அதிலும் ஒரு வரையறை தேவை. இளைய தலைமுறையினர் பெரும்பாலும் செல்போனும் கையுமாகவே அழைகின்றனர். ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக அவற்றை பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால் எந்நேரம் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் என சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பது தவறு. கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழியை சமூக வலைதளம் மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும். உலகின் எந்த முடுக்கில் எது நடந்தாலும் சமூக வலைதளங்கள் வாயிலாக அவை வெளிப்பட்டு விடுகின்றன. நேரில் காணாத முடியாத விஷயங்களை கண் முன்னே கொண்டு வருவதும், தேடினால் கிடைக்காத தகவலே கிடையாது என்பதும் சமூக வலைதளங்களின் அடிப்படையாக இருக்கின்றன. ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.
செல்போன்களின் வாரம் முறை திரை நேரம் என்ற தகவல் நமக்கு கிடைக்க பெறும். அதில் நாம் எந்த செயலிக்கு அதிக நேரம் செலவழித்து இருக்கிறோம் என பார்த்தால் அது சமூக வலைதள செயலிகளாக தான் இருக்கும். வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் மொத்தம் 168 மணி நேரத்தில் இளைஞர்களின் செல்போன் திரை நேரம் 40 மணி நேரத்திற்கு மேலாக உள்ளது. அதாவது நீங்கள் வாரத்தில் ஒன்றரை நாள் செல்போனில் மூழ்கி கிடக்கிறீர்கள் என அர்த்தம். இது மனநல ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். சமூக வலைதளங்களின் அடிமையாக இருப்பதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சமூக வலைதளங்களினால் நிச்சயம் உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். வேலை பார்த்து கொண்டி இருக்கும் போதே வாட்ஸ் அப் அல்லது முகநூலில் குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக அதை பார்க்கும் ஆர்வத்தை தவிர்க்கவும். இடைவேளை நேரங்களில் பதிலளித்தால் போதுமானது. இது உங்களது உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும்.
மேலும் படிங்கநீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்கள்
20 ஆண்டுகளுக்கு முன்பாக மகிழ்ச்சிகரமான விஷயமாக இருந்தாலும் அல்லது ஒருவரிடம் பேச நினைத்தாலும் தொலைபேசி எண்ணில் அழைப்போம். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் அவர்கள் கணக்கில் பதிவிடப்படும் புகைப்படங்கள், பதிவுகளுக்கு லைக் போட்டு மனநிலையை புரிந்துகொள்கிறோம். லைக் போடுவது எந்த உறவையும் வலுப்படுத்தாது.
பெரும்பாலான இளைஞர்கள் இரவு நேரத்தில் தான் அதிகம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்பாக திரை நேரத்தை தவிர்க்க வேண்டும். போர்வைக்குள் செல்போன் நோண்டுவது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிறந்த தூக்கத்தை பெற இரவு நேரங்களில் செல்போன் பயன்பாட்டை தவிர்க்கவும்.
சமூக வலைதளங்களில் புதிய உறவுகளை தேடுவதை தவிர்த்து உடனிருக்கும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். முன் பின் தெரியாத நபரிடம் நீங்கள் ஏன் நண்பராக வேண்டும் என சிந்தித்து பாருங்கள்.
சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பது உங்களுக்கான நேரத்தை அதிகப்படுத்த உதவும். நீங்கள் உங்களை பற்றி சிந்திக்க தொடங்குவீர்கள். இது ஒரு ஆரோக்கியமான பழக்கமும் கூட.
மேலும் படிங்கமகிழ்ச்சியாக வாழ உதவும் முக்கியமான 10 பழக்கங்கள்!
சமூக வலைதளங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை ஆனால சுரண்டுகிறது. உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை கூட கவனிக்க விடாமல் உலகின் ஏதோ ஒடு இடுக்கில் நடப்பதை பற்றி கவலைப்பட வைக்கும். உலகையே நேசி ஒருவரையும் நம்பாதே என காலத்திற்கு ஏற்ப வாழுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation