தமிழகத்தில் வெயில் காலம் ஆரம்பிக்க கூடிய இந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தொற்று கிருமி பரவக்கூடும். அது சின்னம்மை என்று சொல்லகூடிய சிக்கன் பாக்ஸ். பல பேர் உடல் சூடு அதிகமாவதால் அம்மை போடுகிறது என நினைக்கிறோம். உண்மையில் குப்பைகளில் வாழக்கூடிய சில கிருமிகள் வெயில் காலம் தொடங்கும் போது பெருகி காற்று வழியாகப் பரவி மனிதர்களை தாக்கும் நிலை ஏற்படுகிறது. அப்படி தாக்ககூடிய கிருமி தான் சின்ன அம்மை. இது பத்து வயதிற்கும் குறைவாக உள்ள நபர்களை அதிகமாக தாக்கும். பிற வயதினரும் பாதிக்கப்படுவது இயல்பானது தான். குழந்தைகளில் இதன் பாதிப்பை அதிகமாகக் காண முடியும். நெரிசலான இடங்கள், அசுத்தமான இடங்கள், குடிசைப் பகுதிகளில் வாழக்கூடிய மக்களிடையே சின்னம்மை அதிகமாகப் பரவும்.
காற்று மூலமாக மட்டுமல்ல நோயாளிகள் பயன்படுத்தும் பொருட்களின் மூலமாகவும் பரவும். நோயாளிகள் பயன்படுத்தும் துண்டு, போர்வை, உடைகளை யாராவது தெரியாமல் பயன்படுத்தினால் பரவல் ஏற்படும். நோயாளியின் உடலில் இருந்து வரக்கூடிய நீர் படிந்திருக்கும் துணி, உடைகளை உபயோகித்தால் சின்னம்மை பரவும். சின்னம்மை பாதிக்கப்பட்ட பிறகு குழந்தைகளோ அல்லது பெரியவர்களையோ வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்த வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே சின்னம்மை ஒருவரிடம் இருந்து மற்றொரு நபரிடம் பரவும். சின்னம்மை ஒரு முறை வந்திருந்தால் மீண்டும் வரக்கூடிய வாய்ப்பு கிடையாது. ஒருவருடைய உடலுக்குள் இந்த வைரஸ் கிருமி நுழைந்த பிறகு சில நாட்களில் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.
முதல் நாளில் காய்ச்சல் போல இருக்கும், இரண்டாவது நாளில் தலைவலி, சோர்வு அதிகமாக இருக்கும் அதன் பிறகு உடலில் எரிச்சல், அரிப்பு ஏற்படும். காய்ச்சல் அதிகமாகும் போது புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் நீர்கொப்பளங்கள் போல தடிப்பு தடிப்பாக மாறிடும்.
மேலும் படிங்கசமூக விலகலை ஏற்படுத்தும் சமூக வலைதளங்கள்! மன நலன் காக்க விலகி இருப்பது எப்படி ?
மார்பு, முதுகு பகுதியில் கொப்பளங்கள் வர ஆரம்பிக்கும். அடுத்தது முகம், அக்குள், கை, கால்களில் வரும். நான்கு முதல் ஏழு நாட்களுக்கு பிறகு நீர்கொப்பளங்கள் உதிர்ந்துவிடும். எனினும் சிலர் இதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வேப்பிலையும், மஞ்சளும் பயன்படுத்துவது நோய் எதிர்ப்புச் சக்திக்கு சிறந்தது.
கர்ப்பிணிகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்களிடையே சின்னம்மை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். நீர்க்கொப்பளம் ஏழு நாட்களுக்குள் சுருங்காமல் பெரிதனால் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு செல்ல வேண்டும். ஏனென்றால் இந்த கிருமி உறுப்புகளை பாதிக்க ஒரு விழுக்காடு வாய்ப்பு உள்ளது நீங்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நபராக இருந்தால் மருந்துகளை முதலிலேயே எடுக்கலாம்.
உணவுமுறை
- சின்னம்மை பாதித்திருக்கும் நேரத்தில் உடலுக்கு நீராதாரம் அதிகம் தேவை. வாயின் உட்பகுதியில் கூட கொப்பளங்கள் வரலாம்.
- அரிசி கஞ்சி, சத்து மாவு கூழ், ஜவ்வரிசி கஞ்சி, பசலக்கீரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, நீர்மோர், இளநீர் ஆகியவற்றை உணவு பழக்கத்தில் சேர்க்கவும்.
சின்னம்மை தடுப்பு
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதே சின்னம்மையை எதிர்கொள்வதற்கான முதல் படி. சில தடுப்பூசிகளும் உள்ளன. மருத்துவரின் பரிந்துரை படி தடுப்பூசி செலுத்திக்கொண்டு சின்னம்மை பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation