மழைக்காலம் என்பது குளுமையான சூழலை ஏற்படுத்தினாலும், அது நோய்த் தொற்றுகளையும் கூடவே அழைத்து வருகிறது. குறிப்பாக, மூக்கடைப்பு, சைனஸ் போன்ற பிரச்சனைகள் இந்த நேரத்தில் பலருக்கு அதிகரிக்கக் கூடும். மழைக்காலத்தின் சுகமான அனுபவங்களை முழுமையாக அனுபவிக்க, இது தொடர்பான நோய்த் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம். அதற்கான எளிய வழிமுறைகளை இதில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Triphala suranam benefits: திரிபலா சூரணம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
மழை நீரில் மாசுக்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கலாம். மழையில் நனையும் போது அவை மூக்கின் வழியே உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இது சளி மற்றும் மூக்கடைப்பை ஏற்படுத்தும். எனவே, மழைக்காலத்தில் வெளியே செல்லும் போது குடை அல்லது மழை அங்கி (raincoat) எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் ஈரப்பதமான, காற்றோட்டமில்லாத சூழல் கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் வளர வழிவகுக்கும். வீட்டை எப்போதும் உலர்ந்ததாகவும், காற்றோட்டமானதாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இதற்காக ஈரப்பதத்தை உறிஞ்சும் இயந்திரங்களை பயன்படுத்தலாம் அல்லது ஜன்னல்களை திறந்து வைத்து இயற்கையான காற்றோட்டத்தை அனுமதிக்கலாம்.
மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனை குணப்படுத்துவதற்கு ஆவி பிடித்தல் ஒரு சிறந்த வழி. யூகலிப்டஸ் போன்றவற்றை நீரில் சேர்த்து ஆவி பிடிப்பது உடனடி நிவாரணம் தரும். மேலும், மூக்கடைப்புக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் உப்புநீரை (saline spray) பயன்படுத்துவது நல்லது.
மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்
மழைக்காலமாக இருந்தாலும் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. மூலிகை தேநீர், எலுமிச்சை சேர்த்த சூடான நீர் அல்லது மஞ்சள் கலந்த பால் போன்றவற்றை அருந்துவது மூக்கின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கைகளின் மூலம் கிருமிகள் எளிதில் பரவுகின்றன. உங்கள் முகம் அல்லது உணவு பொருட்களை தொடுவதற்கு முன், கைகளை நன்றாக கழுவுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது மூக்கு வழியாக வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுவதை தடுக்கிறது. இந்த எளிமையான பழக்கம், உங்களை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com